பறையா எனும் போது வலிக்கிறதா தமிழரே...!

சுமனதேரர் “பற தெமலா” என்று திட்டியதால் கொதித்துப்போயுள்ளது தமிழுலகம். அவரது சிங்கள பௌத்தத்தோடு தனியாக கணக்கு தீர்த்துக்கொள்வோம். தமிழர் நமக்கும் அது சார்ந்த கணக்கொன்று தீர்க்கப்படாமல் நிலுவையில் தொடர்கிறதே அதைத் தான் இங்கு குறிப்பிடவருகிறேன்.

இங்குள்ள பிரச்சினை பறையர் அல்லாத தம்மை பறையர் என்று அழைத்து விட்டார்கள் என்பது தானே ஒழிய. “பொதுவாக“ சாதிய இழிவு புரிந்தார் என்பதற்காக எழுந்த ஆத்திரம் அல்ல இது.

“பறையா” என்று திட்டியதில் வரும் அறச் சீற்றம் என்பது தமது சாதியப் பெமிதத்துக்கு விழுந்த அடியாக உணர்கிறார்களே ஒழிய தான் சார்ந்த சக மனிதரின் சுமரியாதைக்கும், கௌரவத்திற்கும் ஏற்பட்ட இழுக்காக கருதுவதில்லை.

தமக்கான இழுக்குக்கு நீதி கோரும் தார்மீகத்தை எப்படி அடைவது. சக மனிதரும் அதுபோல பாதிக்கப்படும் போது நீதிக்காக நிற்பதன் மூலம் தான் அந்த தார்மீகத்தை அடைய முடியும்.

சமூக நீதி என்பது தனக்கு மட்டும் கோருவதல்லவே. சக மனிதனுக்கும் கோருவது தானே. கொழும்பு பேச்சு வழக்கில் ஒரு பழமொழியை கூறுவார்கள். “உங்கம்மா அம்மா... எங்கம்மா சும்மாவா..!”.

(பி.கு - சிங்களத்தில் பறையா என்பது "அந்நியனே என்பது தான் பொருள் சிங்கள சாதியமைப்பிலும் பறையர் என்கிற சமூகம் என்று கிடையாது. பறையர் சமூகம் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் கிடையாது. ஆனால் அவர்கள் பொதுவாக "சக்கிலியா" என்று எதெற்கெடுத்தாலும் எவரையும் திட்டுவதற்கு பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். தமிழ் சூழலை விட அதிகமாக அவர்கள் அந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்றே கூறலாம். குறிப்பாக வாய்மூலம் மாத்திரமல்ல எழுத்திலும் கூட. முடிந்தால் தமிழில் சக்கிலியர் என்று கூகிள் பண்ணிப் பாருங்கள். அதுபோல சிங்களத்தில் සක්කිලි, සක්කිලියා, සක්කිලියෙක්, සක්කිලියෝ போன்ற சொற்களை கொப்பி செய்து தேடிப்பாருங்கள் நான் சொல்வதை உங்களால் உறுதிபடுத்த முடியும்.) இதனை எதிர்த்து நம் சக “தமிழர்கள்” இது வரை கொதித்ததுண்டா... அவர்கள் தமிழர்கள் இல்லையா? சக மனிதர்கள் இல்லையா? சக சாதியைச் சேர்ந்தவரில்லை என்பது தானே உங்கள் பிரச்சினை.

இது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்... இது போன்ற விடயங்களை பதிவு செய்யத் தான் உரிய ஊடகங்கள் இல்லை.

நன்றி - https://www.facebook.com/nsarawanan?hc_ref=NEWSFEED&fref=nf (சரவணன் நடராசா)

Top