1150 x 80 px

 

துப்பாக்கி, போதை மருந்து கடத்தலுக்கு முகப்புத்தகத்தில் ரகசிய குழுக்கள்

துப்பாக்கி மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக முகப்புத்தகத்தில் (Face book) ரகசியக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக சிகாகோ பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிகாகோ காவல்துறை கண்காணிப்பாளர் எட்டி ஜான்சன் தெரிவிக்கையில் கடத்தலுக்காக முகப்புத்தகத்தில் (Face book) ரகசியக் குழுவாக செயல்பட்டு வந்ததாக 50 இற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பான கடந்த 10 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் முகப்புத்தக நிறுவனத்தால் தன் தொழில் நுட்பத் துறைகளைக் கொண்டு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் பல ரகசிய முகப்புத்தக குழுக்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை புரியும் வகையில் ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Top