அரசாங்கத்தை அவமதிப்பது பற்றி கலாநிதி குமாரசுவாமி தனிப்பட்ட ரீதியில் செயல்படுகின்றாரா?

தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநரினால் கடந்த காலங்களில் நிதி பிரிவினரை அழைத்து மேற்கொண்ட அறிக்கைக்கமைய இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதினால் இலங்கை யுத்ததினால் பாதிக்கப்பட்ட போது ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் இரண்டாவது என அங்கு தெரிவித்துள்ளது.இலங்கையின் பொருளாதாரம் தற்பொழுது தீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளியைப் போல் என தெரிவித்துள்ளது. இந்த மத்திய வங்கியின் ஆளுநர் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ராலின் நெருங்கியவரும் ராஜ் ராஜரத்ணமின் நெருங்கியவரும் ஆவார்.


ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளரான நிதி அமைச்சர் இதற்கு வெகு விரைவில் பதலளித்தார். கலாநிதி குமாரசுவாமி, பொருளாதாரத்தை முற்றாக வீழ்த்திய கடந்த ஆட்சியுடன் தொடர்புபட்ட நபராவார். ராஜபக்ஷவினால் கடன் சுமையில் தள்ளப்பட்ட நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஒரு ரூபாய் பங்குகளாக்குவதற்கு இடமிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநரினால் தெரிவிக்கப்பட்ட கருத்தின் காரணமாக ரூபாய் தேவையற்ற அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகளாக இருப்பது ரூபாயின் பெறுமதி பாரியளவு வீழ்ச்சியடைவது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை தெரிவிக்கும் முன் கலாநிதி குமாரசுவாமி தனது அமைச்சரிடம் அனுமதியை பெற்றுக் கொண்டாரா என கேள்வி எழுந்துள்ளது.


மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் அச்சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ளாத காரணத்தினால் அரசின் சிந்தனை இதற்கு மேல் வேறுபட்டது என குறிப்பிடுகின்றது. நிவாட் கப்ரால் குழு மத்திய வங்கி ஆளுநரினருடன் கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தனக்கு ஏற்ற தாளத்திற்கு அவரை இயக்குவதாகவும் மத்திய வங்கி ஊழியர்கள் குழு தெரிவிக்கின்றனர்.


அது மட்டுமின்றி தனியார் பிரிவு வங்கி அதிகாரிகள் அவரைச் சுற்றி வருவதாகவும், கடன் சுமையிலிருந்து மீழ்வது தொடர்பில் தீர்வினைப் அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி தாளத்திற்கு ஏற்றவாறு அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சிபத்திரத்திற்கு துரோகம் இழைக்கும் - எதிர்க்கட்சியின் நிகழ்ச்சிபத்திரத்தை பலப்படுத்த- வௌ;வேறு பாடல்களை பாடுவதற்கு முடியாதவாறு உரையாற்றுவது பற்றி பகிரங்கமாக மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவிக்க வேண்டும்.    

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top