ரணிலையும் கருவையும் பிரிப்பதற்கு சஜித் மீண்டும் சதி !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்து நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ செயல்படுவதாக சிறிகொத்த நம்பகத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ள சஜித் பிரேமதாஸ பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுக்கிடையில் சதி இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அச்சதிக்கேற்ப ஐக்கிய தேசிய கட்சியி உறுப்பினர்கள் சிலர் கரு ஜயசூரிய தலைமையில் ஸ்ரீலசுகயுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு செயல்படுவதாகவும் அவ் அரசாங்கத்தின் பிரதமராக கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவம் சஜித் பிரேமதாஸ ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரிடம் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாஸ இந்த சதியின் ஒருங்கிணைப்பாளராக குறிப்பிடப்பட்டிருப்பது ஐதேக தொடர்பாடல் பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் ஹில்டன் ஹோட்டலின் தற்போதைய தலைவர் கிரிஷாந்த பிரசாத் குரே ஆகியோர் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சஜித் பிரேமதாஸவின் நோக்கம் எவ்வாறாயினும் பிரதரை அப்பதவியிலிருந்தும் கட்சியில் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி தான் தலைவராக செயல்பட வேண்டும் என்பதே. இவ் தனிப்பட்ட சந்திப்பின் போது ஸ்ரீலசுக அமைச்சர்களுக்கு வேலை செய்வதற்கு இடமளிக்காது இருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றி அரசாங்கத்திலிருந்து விலகி மீண்டும் எதிர்க்கட்சியை கைப்பற்ற முடியும் என சஜித் ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் இவ் ஆலோசனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள பிரதமர் அவரின் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டுள்ளார். சஜித்தின் கருத்தை முதலில் புரிந்து கொள்ளாவிட்டாலும் அதன் உண்மையை புரிந்து கொள்வதற்கு நீண்ட நாட்கள் செல்லவில்லை.

இது தொடர்பில் அறிந்து கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய உடனடியாக பிரதமரை சந்தித்து தனது அரசியல் வாழ்க்கையில் பயனிப்பதற்காககவே தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ காலங்களில் நிச்சயமாக அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்த ஜயசூரிய தன்னைப் பற்றிய பயமோ சந்தேகமோ கொள்ள தேவையில்லை என பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிஷாந்த பிரசாத் குரேவை ஐதேக நிர்வாக குழுவில் நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் அதற்கு கடுமையான எதிரப்;பு தெரிவித்த சஜித் பிரேமதாஸ 'கிரிஷாந்த குரே ரணிலில் நண்பர்' என தெரிவித்திருந்தார். பிரதி தலைவரின் எதிர்ப்பை பொருட்படுத்தாது பிரதமர் அந்த நியமனத்தை மேற்கொண்டார்.

பிரதமர் தனது பதவியை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வாராயின் தனது தலைவர் கனவு நனவாகி விடும் என என்னும் சஜித் பிரேமதாஸ மீண்டும் பழைய விளையாட்டையே தொடங்கிவிடுவார் என ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்களின் கருதுவது முக்கிய காரணமாக உள்ளது என சிறிகொத நம்பகத்தகுந்த வட்டாரங்களின் செய்தி குறிப்பிடுகின்றது.      

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top