கீத் நொயர் கடத்தலில் கோத்தாவுக்கு நேரடி தொடர்பு!

ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புட்டுள்ளதாக ​தெரியவருகிறது.

2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்ட கீத் நொயர் தொம்பே பிரதேசத்தின் உத்தியோகபூர்வமற்ற இராணுவ பாதுகாப்பு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சிவில் அமைப்பு, தூதரக அலுவலகம் மற்றும் சர்வதேச சிவில் அமைப்புகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் நொயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கடத்தலுடன் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக கல்கிசை நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான மேஜர் புலத்வத்த, கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்டிருந்த தொம்பேயில் அமைந்துள்ள இராணுவ பாதுகாப்பு வீட்டில் அவரது தனிப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை வழங்கி வாடகைக்கு பெற்றுக் கொண்ட வீடு என குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்டதனை தொடர்ந்து அவர் தனது பிரதானியான இராணுவ புலனாய்வுப் பிரிவு பிரதானி அமல் கருணாசேகரவிடம் அறிவித்துள்ள நிலையில் அமல் கருணாசேகரவினால் இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி கபில ஹெந்தாவித்தாரனவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கபில ஹெந்தாவித்தாரனவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கோத்தபாய ராஜபக்சவினால், மேஜர் புலத்வத்தேவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்து தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நேரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பில் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டதனை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள் பிரதிவாதங்களை மேற்கொள்ளாத நிலையில் நீதிமன்றம் அமைதியாகியுள்ளது. அங்கிருந்த சட்டத்தரணிகள் உடனடியாக இந்த நிலைமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பு கிடைத்தவுடன் உதய கம்பன்பில, நலிந்த இந்ததிஸ்ஸ, மிஸ்பா உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் நேற்று மாலை கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் சந்தித்து மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த கலந்துயாடலின் தீர்மானத்திற்கமைய நாட்டில் மீண்டும் ஒரு சுற்று இராணுவ நாடகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் இராணுவத்தினுள் இது தொடர்பில் சாட்சி வழங்கவுள்ள சாட்சியாளர்களை அமைதிப்படுத்தும் பொறுப்பு கர்னல் ஷம்மி குமாரரத்ன மற்றும் கர்னலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top