'அண்ணாமர் அஞ்ச வேண்டாம் வழக்கு வெல்வது எப்படியென நான் சொல்கிறேன்' - பசில்

ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இன்று (25) நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் 27ம் திகதி உயர் நீதிமன்றில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திகையை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது.

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்படும் வரை இலங்கை வரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற பசில் தற்போது திடீரென வந்திருப்பது தனக்கு எதிராக பிறப்பிக்கப்படவுள்ள பிடிவிறாந்தை தவிர்த்துக் கொள்ளவென கூறப்படுகிறது.

பசில் வசம் உள்ள சட்டவிரோத மல்வான பிரதேச காணி தொடர்பிலேயே சட்டமா அதிபர் குற்றப்பத்திகை தாக்கல் செய்யவுள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடைய மற்றொரு நபரான திரு நடேசன் தற்போது வௌிநாட்டில் உள்ளார்.

இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக இருந்த முதித ஜயகொடி அரச சாட்சியாளராக மாறியுள்ளார். எனினும் இதனை சிரேஸ்ட சட்ட வல்லுநர்கள் எதிர்க்கின்றனர். பிரதான நபரை விட்டு மற்றையவர்கள் கைது செய்யப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நன்கு அறிந்த பசில் ராஜபக்ஷ, 'அண்ணன் பயப்பட வேண்டாம் வழக்கை வெல்லும் விதத்தை நான் காண்பிக்கிறேன்' என்று மஹிந்த மற்றும் கோத்தாவிடம் கூறிவிட்டு நாட்டுக்கு வந்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top