FCID பிரிவுக்கு வயது இரண்டு!

இலங்கை பொலிஸின் 151 வருட வரலாற்றில் அதிக சர்ச்சைக்குரிய அதிகம் பேசப்பட்ட ஒரு பிரிவான பொலிஸ் விசேட நிதி மோசடி பிரிவு Financial Crime Investigation Division இன்று (26) இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்கிறது. 2015 ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கம் உருவான பின் பெப்ரவரி 26ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு FCID ஆரம்பிக்கப்பட்டது.

ஊழல் தொடர்பில் மக்கள் மனதில் இருக்கும் மாயை சிந்தனையை இல்லாதொழித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அனைவரது மத்தியிலும் பொது சொத்து குறித்த ஒழுக்க மூலத்தை ஏற்படுத்த (Fiscal Discipline) பிரிவு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளது.

சிறுசிறு குறைப்பாடுகள் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களில் FCID விசாரணை மூலம் அரசாங்கத்திற்கு பில்லியனுக்கும் அதிகமான லாபம் கிடைத்துள்ளது. அதில் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வத்த காணியின் பெறுமதி உள்ளடங்கவில்லை. இந்த சொத்துக்கள் மார்ச் 29ம் திகதி 208 மில்லியன் ரூபாவிற்கு ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.

FCID என்ற பெயரை தெரிவுசெய்த ரவிந்திர வித்யாலங்கார என்பவரே FCID பிரிவின் பொறுப்பதிகாரியாக கடந்த இரண்டு வருடங்களாக செயற்பட்டு வருகிறார்.

அண்மையில் பிரதமர் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மஹிந்த 'FCID காரர்கள் அதிகம் லஞ்சம் பெறுகின்றனர். இது அரசாங்கத்திற்கு நல்லதல்ல' என்று கூறியுள்ளார். மஹிந்தவின் மனநிலை அறிந்த ரணில் 'நான் அதுகுறித்து கூர்ந்து கவனிக்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.

FCID பிரிவால் விரைவில் கைது செய்யப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியலில் பசில் உள்ளதால் அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.

லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு விசேட செவ்வியளித்த FCID பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வித்தியாலங்கார, 'FCID விசாரணைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அப்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமானால் நாமல், யோசித்த, விமல் போன்றவர்கள் எப்போதும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்' என்று கூறினார். எதிர்வரும் நாட்களில் FCID பிரிவின் பக்கச்சார்பின்மை மக்களுக்கு புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top