யாழ்.மக்களிடம் இருந்து ஐதேக.வை ஓரங்கட்டும் சதி வேலையில் ஐதேக அமைப்பாளர் துவாரகேஸ்வரன்!

ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுநாள் வரை பெற்று வரும் ஒரு பாராளுமன்ற அங்கத்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக யாழ் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகி இலங்கை பெண்கள் மற்றும் யாழ் மக்கள் சார்பில் குரல் எழுப்பிவரும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான சதிச் செயலாக இது இருக்கலாம் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் கௌரவத்தையும் யாழ். மாவட்டத்தில் குறித்த சில தமிழர்கள் ஐக்கிய தேசியக்கட்சி மீது வைத்திருக்கும் நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் செயற்படுவதால் தியாகராசா துவாரகேஸ்வரன் யாழ் மக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் யாழ்ப்பாண வடிவேல் என்று கேலிக் கூத்தாக அழைக்கப்படுகிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி நாட்டில் நிலவுவதால் நாங்களே ராஜா என்ற மமதையில் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறல், தனது ஈஸ்வரன் டிரவல்ஸ் பஸ் தவிர்ந்த ஏனைய பஸ் உரிமையாளர்களின் வயிற்றில் அடித்தல், இராணுவத்தினருடன் கொஞ்சிக் குழாவி தமிழ் மக்களை காட்டிக் கொடுத்தல், பணம் உழைக்கவென பலவித வித்தைகளையும் செய்தல், மேர்வின் சில்வா பாணியில் பொலிஸாரை தாக்குதல், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல், எதிரிகள் மீது அசிட் வீசுதல், சொத்துக்களை சுருட்டவென சூட்சமம் செய்தல் போன்ற பல திருகுதால வேலைகளை இந்த தியாகராசா துவாரகேஸ்வரன் முன்னெடுத்து வருவதாக யாழ், மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவரது இந்த நடவடிக்கைகளை கண்டித்து யாழ். மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்டபோது, ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை துவாரகேஸ்வரனின் சண்டித்தனத்துக்கு ஆதாரமாகும்.

மேலும் அண்மையில் யாழ். பண்ணை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து துவாரகேஸ்வரனுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. “துவாரகேஸ்வரன் முகநூலில் ஊடாக தமிழ் மக்களுக்கு துஸ்பிரயோகம் செய்கிறார்” எனும் தொனிப்பொருளிலேயே இவ் கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்..

“கொள்ளைக்காரனே உனக்கு எதற்கு பேஸ்புக்”
“வைரத்தை பெற்ற தியாகராசாவே, ஏன் இந்த வைரசை பெற்றாய்?”
“துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடைசெய்”
“சரவணபவனை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை?”
“ஊடக அமையம் உனக்கு நாடக மேடையா?”
“ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே”
“படிக்காத எருமையே, ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரை விக்காதே”
“சாக்கடையின், முகநூலை தடைசெய்”… போன்ற கோசங்களை எழுப்பினர்.

துவாரகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கொழும்பிலும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக வாழைத்தோட்டம் மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அமைப்பாளர் என்ற பதவியை விற்று சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார் துவாரகேஸ்வரன். ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரை பயன்படுத்தி யாழ். மக்களை ஏமாற்றி வயிற்று பிழைப்பு நடத்தும் தியாகராசா துவாரகேஸ்வரனின் இழிசெயல்களை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் அனுமதிக்குமாயின் யாழ். மாவட்டத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் எதிர்காலத்தில் இழக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இது தொடர்பில் அமைதியாக இருக்காது ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்திற்கு அறிவித்து தனதும் தனது கணவரினதும் கௌரவத்தை யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் வேண்டுகோள்.

தியாகராசா துவாரகேஸ்வரன் குறித்த மேலும் பல உண்மைத் தகவல்கள் விரைவில்...

-யாழாள்வான்-

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top