ஸ்ரீலங்கா விமான சேவை பணிப்பாளர் சபையை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

தற்போதைய ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பொறுப்பதிகாரி அஜித் டயஸ் என்பவரே. இதுவரை இவர் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிஷாந்த விக்கிரமசிங்கவின் கொள்கையை பற்றி கொண்டு வந்து ராஜபக்ஷவினால் ஸ்ரீலங்கன் விமானசேவையை வீழ்த்தியதை முன்நிறுத்தியே தனது பொழுதை செலவிடுகின்றார்.

பெப்ரவரி 26ம் திகதி வெளிவந்த சன்டே டைம்ஸ் அரசியல் பகுதியில் நபர் ஒருவரின் மூலம் வாசித்திருந்தால், ராஜன் பிரிடோ மற்றும் சானக சில்வா போன்ற நல்ல நபர்கள் உள்ள தற்போதைய நிர்வாக சபையின் கீழ் உள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெறும் தவறுகள் மற்றும் முகாமைத்துவ பிரச்சினைகளை கண்டு ஆச்சியம் அடைந்துள்ளனர். பணிப்பாளர் சபையினுள் போலி விளம்பரங்கள் இருக்கின்றதாகவும் ஒவ்வொரு தீர்மானத்தின் போதும் பிரதமரின் பெயரை சுட்டிக்காட்டியே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர் எனவும் அமைச்சர் ஹஷீம் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

எதிர்ப்பார்ப்புகள் இல்லாது போகும் போது அவர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு செல்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தினை பயன்படுத்தியுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் எமக்கு தெரிவித்த இந்த பிரச்சினை அடுத்த பிணைமுறி கொடுக்கல் வாங்கலாகிவிடுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்னர் ஏற்பட்டுள்ள சுரேன் ரத்வத்த விமான நிறுவனத்தை நடத்திச் செல்வது நிஷாந்த விக்கிரமசிங்கவின் காலத்தையும் கடந்த நிலையில். அவர் பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாக சபையை கூட பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கின்றார். இதனால் நிர்வாகத்தினருக்கு இவர் மீதுள்ள நம்பிக்கை இல்லாது போயுள்ளது. அவருக்கு இருக்கும் ஒரெ பலம் அவரது சகோதரரான சிறிசேனவின் வெற்றியின் பின் அரசாங்கத்துடன் இணைவதற்கு வழிகாட்டிய சரித ரத்வத்தே.

ரத்வத்தே 2004ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடித்தவர். அவரை அரசாங்கத்திடமிருந்து வெளியேற்றினால் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்காக 11 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. முன்னைய காலத்தில் வழங்கிய சேவையினால் பிரதமருக்கு அவரை கைவிட முடியாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமரே அவரை லண்டனுக்கு அனுப்பி வையங்கள். தற்போதைய உயர்ஸ்தானிகரை விட நன்றாகவே இவருக்கு அந்த சேவையை ஆற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top