தீய நோக்கமுடையவர்களினாலேயே ரூபாய் வீழ்ச்சியடைகின்றது !

இந்நாட்டு பங்குச் சந்தையில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் மூலம் முதலீடு செய்யப்பட்டிருந்த பாரியளவிலான நிதி ஒரே தருணத்தில் மீண்டும் பெற்றுக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கான நோக்கத்தில் செயல்படுவதாக நாம் கடந்த 24ம் திகதி குறிப்பிட்டிருந்தோம். அதன் ஊடாக டொலரின் பெறுமதியை ஒரு ரூபாய்க்கு குறைத்து அரசாங்கத்தை கடஷ்டத்தின் மத்தியில் ஆழ்த்துவதற்கு எதிர்ப்பார்த்திருந்தது.

தகவல்கள் குறிப்பிடும் வகையில் முதலீடு செய்யப்பட்டிருந்த Franklin Templeton Fund என்ற நிதியத்தில் 1475 மில்லியன் டொலர் மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது. அது கிட்டத்தட்ட ரூபா 22,000 கோடி பெறுமதியான நிதி. இந்த Franklin Templeton Fund சர்வதேச நிதியம் என்றாலும் உண்மையிலேயே பணம் பெற்றுக் கொண்டிருப்பது ராஜபக்ஷ குடும்பம் மறறும் அவரது நெருங்கியவர்களே.

இந்த பணத்தை பெற்றுக் கொண்டதில் அவர்கள் முதலில் எதிர்ப்பார்த்தது ரூபா 170 அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதாகவே. அதன் ஊடாக பொருளாதாரத்தை வீழ்த்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி அவர்களது எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே எதிர்ப்பார்த்தார்கள். பல்வேறு மோசடி, ஊழல், இலஞ்சம் ஆகியவற்றின் ஊடாக கறுப்புப் பணம் இந்த Franklin Templeton Fund நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் பங்குச் சந்தையில் மற்றும் திறைசேரி உண்டியல் மற்றும் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்திருந்ததும் இந்த கறுப்புப் பணத்தின் ஒரு பகுதியிலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் இந்த பிரச்சினையை முதலில் கண்டுபிடித்து அது தொடர்பில் தீர்வு எட்டியதனால் டொலருக்கு மதிப்பை மட்டுப்படுத்தியது. அதற்கமைய தற்பொழுது ஒரு டொலரின் பெறுமதி ரூபா 151 வரை வரையரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக டொலரை கொள்வனவு செய்வதற்கான அசவியம் அரசாங்கத்திற்கு இருந்தும் தீய நோக்கங்களுக்காக பொருளாதாரத்தை காட்டிக்கொடுப்பவர்களினால் தொடர்ந்தும் சர்வதேசத்திடம் கடனாளியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top