கரன்னாகொடவிற்கு வீடு, தஸநாயக்கவிற்கு கார், கடத்தப்பட்ட மனிதர்கள் மட்டும் கடற்படை....

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு சொந்தமானஇ கொழும்பில் அமைந்துள்ள சுவிசல் இரு வீடு தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாவல குணசேகர கார்டன்ஸில் அமைந்துள்ள சொகுசுவாய்ந்த வீட்டின் பெறுமதி ரூபா 1,600 இலட்சமாகும்.


நாவல சேணாநாயக்க ஒழுங்கையில் அமைந்துள்ள மற்றைய வீட்டின் பெறுமதி ரூபா 1,900 இலட்சம் என கறிப்பிடப்பட்டுள்ளது. யாருக்கு வேண்டுமானாலும் தங்களால் முடியுமானால் வீடு வாங்கினால் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் முன்னாள் கடற்படைதளபதி இவ்வாறு சொத்துகள் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரனை ஆணைக்குழு கண்காணிக்க வேண்டும். அது கடற்படை தளபதியின் ஊதியத்தில் என்றால் இவ்வாறான மாளிகையை பெற முடியர்து.


கரன்னாகொட இடையூறு விளைவிப்பது ஏன்?
கரன்னாகொட முன்வைத்த குற்றம் என்பதினாலேயே இதனை சந்தேகத்திற்கிடமாக பார்க்க வேண்டியுள்ளது. திருகோணமலை மற்றும் கொழும்பு பிரதேசத்தின் மாணவர்கள் சிலரை கடத்திச்சென்று இலஞ்சம்; கோரிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கரன்னாகொடவின் உதவியாளரான சம்பத் என்ற சம்பத் முனசின்ஹ உட்பட சிலரே. குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளின் தொடர்பின் ஊடாக இடையூறு விளைவித்ததாக வசந்த கரன்னாகொடமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக்கொள்தல் தொடர்பில் நபர்களை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சம்பந்தமாக கடற்படை தளபதிக்கு எதிராக ஆதரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தான் நிரபராதி என்றால் கரன்னாகொட விசாரனைக்கு இடையூறுவிளைவிப்பது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.


தஸநாயக்கவின் பிறந்த நாள் பரிசு
திருகோணமலை ஆறு மாணவர்களை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் கே.பி தஸநாயக்க கடற்படை அதிகாரி மாணவர்கள் பயணித்த வாகனத்தை தனதாக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர் அந்தவாகனத்தின் இலக்கத்தகடை மாற்றிஇ வேறு நிறமாக்கிஇ தனது பாரியாரின் பிறந்த தினத்திற்காக பரிசாக வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 'இதோ இராணுவ வீரர்களை பழிவாங்குகின்றனர்' என அரசியல் சந்தர்ப்வாதிகள் குரல் எழுப்பும் சந்தர்ப்பத்தில் இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரனை இடம்பெற வேண்டும்.


ஜனாதிபதி சரியான தீர்மானம் எடுப்பாரா?
தஸநாயக்க இன்றும் பிணையில் வெளியே தான். கரன்னாகொட எதுவும் தெரியாதவாறு நன்றாக உள்ளார். வீரர்களுக்கு வீரர்கள் எனவும் குற்றவாளிகளுக்கு குற்றவாளி என்றும் கொலையாளிக்கு கொலையாளி என்றும் கூறிவதற்கு முதுகெலும்புள்ளவராக இருக்க வேண்டும். இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு வீரர்-திருடர்-கொலையாளி எதிராக சுட்டிக்காட்டும் செயல்தொடர்பில் மீண்டும் பார்க்க வேண்டும். இலஞ்சம் கோருதல் தொடர்பில் மனித வாழ்க்கை பலிகொடுக்கப்பட்டுள்ளதுடன் பணம் மனித உயிரை விட உயரானது என்றால் அது உயர் அதிகாரிகளின் செயல்பாடாகும். அவ்வாறான செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top