புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதை எவராலும் தடுக்க முடியாது – பிரதமர்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவது, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது, பழைய மற்றும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்தல் ஆகியனவே ஜனாதிபதி பொது வேட்பாளரின் வாக்குறுதியாக இருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு வரருடங்களை கடந்த நிலையிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பில், அரசாங்கத்தை பிரதிநதிதித்துவப்படுத்தும் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக இடையே இனவாதம் தூண்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு எதிர்ப்பார்த்திருப்பதுடன் ஜனாதிபதி தேர்தலின் போது பெற்றுக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி அவ்வாறே நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஐதேக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும் ஸ்ரீலசுக இதற்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன் அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருதல் போதுமானது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்;. அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பினை பாதிக்கும் விதமான எவ்வித கருத்தும் உள்ளடக்கப்படுவதற்கு ஸ்ரீலசுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த நாட்களில் பிரதமரை சந்தித்த ஐதேக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் வெகு விரைவில் இடம்பெற வேண்டும் என சுட்டிக்காட்யுள்ளனர். அவ்வாறு இடம்பெறாவிட்டால் நல்லாட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை இல்லாது போகும் என்றும் அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியுடன் இணை;ந்து மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பதற்கு முயற்சி செய்ததாக அச்சந்திப்பில் ஐதேக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கொள்கையை மாற்றுவதற்கு முயற்சித்து வருவதுடன் அந்நிலைமையை தோற்கடிப்பதற்கு செயல்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய குழு தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்ட அரசியல் கட்சி, சிவில் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகளினால் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும் வெகு விரைவில் பிரதமர் தலைமையில் கூடும் புதிய அரசியலமைப்பிற்கான குழு இவ் அனைத்து அமைப்புகளின் கருத்துகளை தெரிந்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வதா இல்லையா என்பது பற்றியும் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை கொண்டு செல்வதா நீக்குவதா என்பது பற்றிய கருத்துகள் தொடர்பில் இக்குழு தீர்மானிக்கும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அது மட்டுமின்றி தேர்தல் முறைமை, அதிகாரப் பகிர்வு, உள்ளுராட்சி முறைமை தொடர்பில் இக்குழுவில் கலந்துரையாடப்படும் என பிரதமர் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.


இக்குழுவினர் எடுக்கும் தீர்மானம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து பின்னர் அந்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாகவும் அது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்பு அனைத்து கருத்துகளையும் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயல்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.


புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை தடுப்பதற்காக ஒரு சிலர் செயல்பட்டிருந்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி போல் அந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு எவ்விதத்திலும் நிறுத்தப்பட மாட்டாதுஎன பிரதமர் தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top