தினேஸ் குணவர்த்தன நீர் விநியோகத்தில் செய்த மோசடி! பகுதி 1

ஆளும் கட்சியின் பிழைகளை கண்டறியும் செயற்பாட்டில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது. யாராக இருந்தாலும் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். நாமும் அதற்கு பூரண ஆதரவு. ஆனாலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவராக செயற்படும் தினேஸ் குணவர்த்தன போன்றவர்கள் களவு குறித்து பேசுவது கேலிக் கூத்தாகும்.

அடுத்தவர்களின் ஆடையை தூக்கி ஹுஹு சத்தமிடும் தினேஸ் போன்றவர்கள் கடும் கொள்ளையர்கள். வௌ்ளை ஆடை அணிந்து ஊடகங்கள் மத்தியில் வந்து Top 10 திருடர்கள் குறித்து கதைக்கும் தினேஸ் போன்றவர்கள் உச்சநிலை திருடர்கள் என்பதை நாம் அம்பலப்படுத்துகிறோம்.

மதிப்புத் தொகை பட்டியல் மறைப்பு

தினேஸ் குணவர்த்தன நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சராக இருந்த 2013/2014 காலத்தில் இது இடம்பெற்றுள்ளது. அம்பாறை களுவாஞ்சிக்குடிக்கு நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பெறுமதி 4.9 பில்லியன். இலங்கை சட்டத்தின்படி 15 மில்லியனுக்கு அதிகமான திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெற வேண்டும். அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அமைச்சரவை அனுமதி பெற்றபோதும் அதன் பெறுமதி 3 பில்லியன் ஆகும். திட்டம் தொடர்பான விலைமனு கோரலிலும் 3 பில்லியன் என்றே கூறப்பட்டிருந்தது. இந்த ஏமாற்று வேலை 2013இல் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது.

Sun Power உடன் காதல் தொடர்பு

2013 தொடக்கம் களுவாஞ்சிக்குடி நீர்த்திட்டத்திற்கு Sun Power Systems Private Limited என்ற நிறுவனத்துடன் தினேஸின் அமைச்சு ஆவண பரிமாற்றம் செய்து கொண்டுள்ளது. Sun Power என்ற நிறுவனம் மகாராஜா கூட்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளதுடன் அதன் தலைவராக ஜயந்த சமரகோன் செயற்பட்டுள்ளார். விலைமனுகோரலுக்கு முன்பாகவே அமச்சரவை பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தினேஸ் குணவர்த்தன Sun Power நிறுவனத்துடன் காதல் தொடர்பு வைத்து அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொண்டுள்ளார்.

விலைமனு கோரல்

3 பில்லியன் ரூபாவில் இத்திட்டத்தை செய்ய முடியாது என்பதால் மற்றைய தரப்பினர் ஆர்வம் காட்டவில்லை. செயற்திட்ட பெறுமதி 4.9 பில்லியனாக இருக்கையில் தினேஸுடன் தொடர்பு வைத்திருந்த Sun Power நிறுவனம் தனது விலைமனுவை 9 பில்லியனுக்கு சமர்பித்துள்ளது. அத்துடன் 6.84 பெறுமதியான மாற்று விலைமனு ஒன்றையும் நிறுவனம் முன்வைத்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top