ரவி இடத்தில் மங்கள என்ற செய்தி பொய்!

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவிக்கு வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் வௌிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு எதிராக அண்மையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சில விசமிகள் செய்யும் பொய் பிரச்சாரம் இதுவென கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சு பதவில் இருந்து நீக்க சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.

எனினும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் நிதி அமைச்சு அல்லது வௌிவிவகார அமைச்சில் மாற்றம் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவு ஏற்படுத்தவென சிலர் சூழ்ச்சி செய்வதாகவும் பொறுத்தமானவர்கள் பொறுத்தமான அமைச்சை பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top