நிமால் லான்சா வௌிநாட்டுக்கு தப்பியோட்டம்!

உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசேட விசாரணை பிரிவு என்பன விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்வரும் நாட்களில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவுஸ்திரேலியா சென்ற நிமல் லான்சா பாராளுமன்றுக்கு அறிவிக்கவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் தேடி பொலிஸார் நிமால் லன்சாவின் வீட்டுக்குச் சென்றபோது அவர் பிரபல்யம் அடைந்தார். நிமால் லன்சா கைது செய்யப்படாமல் தடுக்க அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது வீட்டிற்கு உடனடியாகச் சென்றார்.

நல்லாட்சி அரசாங்கத்திடம் சரணடைந்த நிமல் லான்சாவிற்கு பிரதி அமைச்சு கிடைத்த போதும் அவருக்கு எதிரான விசாரணை நிறுத்தப்படவில்லை. தனக்கு சொந்தமான உல்லாச விடுதியை பிரவுன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு லான்சா வௌிநாடு சென்றுள்ளார். போதை பொருள் நிதி மோசடி வௌிநாட்டுக்கு ஆட்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிமால் லான்சா, மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பில் வௌிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் நிமால் லன்சாவிற்கு அழைப்பெடுத்த மஹிந்த, 'நாங்களும் கஸ்டத்தில் உள்ளோம். எமக்கும் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீ விரைவில் இங்கிருந்து தப்பிச் செல்' என்று கூறியுள்ளார்.

இந்த அனைத்து தகவல்களையும் நிமல் லன்சாவின் பிரத்தியேகச் செயலாளர் 'ஜீவங்க' லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு வழங்கி உறுதிப்படுத்தினார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top