பஷிலின் மல்வானை நிலத்தினால் அரசாங்கத்தின் நிலவரம் !

பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் சொகுசுவாய்ந்த 16 ஏக்கர் அடங்கிய நிலத்தினை ஏல விற்பனை செய்வதிலிருந்து தடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் செயல்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அரசாங்கத்தின் அழுத்தத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த தடுப்பு நடவடிக்கை காரணமாக இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதி மோசடி பிரிவு பாரியளவிலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிகின்றது.

மல்வானையில் அமைந்துள்ள இந்நிலம், 2017 மார்ச் 29ம் திகதி ஏல விற்பனை செய்யுமாறுபூகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதன் அரச மதிப்பீடாக ரூபா 208 மில்லியன் கருதப்பட்டது. இருப்பினும் கடந்த 17ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் ஏல விற்பனையை நிறுத்துமாறு பூகொட நீதவானிடம் கோரியுள்ளனர்.

இந்த சட்ட நடவடிக்கையின் போது இந்த நிலத்தின் உரிமை தொடர்பில் முதலில் வாசரனை செய்ததது பஷில் ராஜபக்ஷவிடமே. இருப்பினும் இந்நிலம் தனக்கு சொந்தமானது இல்லை என பஷில் தெரிவித்துள்ளார். பின்னர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திரு நடேசனிடம் வினவிய போது தான் அந்நிலத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் ராஜபக்ஷர்களிடமிருந்து கேள்விப்பத்திரம் கோராது கோடிகணக்கிலான ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுத்த பிரபல கட்டிடக்கலைஞர் மூதித ஜயகொடி நிலம் மற்றும் வீடு தனக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்துள்ளார். அதற்கமைய உரிமையளர் அற்ற வீடை பகிரங்கமாக ஏலவிற்பனை செய்யுமாறு நீதவான் தீர்மாதித்துள்ளார்.

நீதவானால் உத்தரவிடப்பட்ட ஏல விற்பனையை நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியாது. நிலம் தேவை எனில் அரசாங்கத்தினால் செய்ய வேண்டியது குறிப்பிட்ட திகதியில் ஏல விற்பனையினால் அந்நிலத்தை கொள்வனவு செய்திருக்க வேண்டும் இருப்பினும் அவ்வாறு செய்யாது அரசாங்கம் தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் ஏல விற்பனை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றது. அரசாங்க அரசியல்வாதிகள் சிலரின் தேவைக்காக உருவாக்கப்பட்ட இந்த செயல்பாடு முற்றாக பொறுப்பு கூற வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதி மோசடி பிரினரே. அன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்த நல்லாட்சி அரசியல்வாதிகள் பிடிபடமாட்டார்கள். வீடு கட்டிய பஷிலும் பிடிபடமாட்டார். மூதிதவும் பிடிபடமாட்டார். இவ்வாறு சென்றால் இறுதியில் நடப்பது என்ன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top