சட்டவிரோத ஆட்கடத்தலுடன் வாசுதேவவிற்கு தொடர்பு!

கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அண்மைக் காலமாக சட்டவிரோத அகதிகள் குறித்து பாராளுமன்றில் குரல் எழுப்பி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளது. ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான நபர் ஒருவருடன் வாசுதேவ நெருங்கிய நட்பு வைத்திருக்கின்றமை இதற்கு காரணமாகும்.

இலங்கைக்குள் சுமார் ஆறாயிரம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து வாசுதேவ நாணயக்கார ஒருபோதும் இல்லாத அளவு பாராளுமன்றில் உணர்ச்சிபொங்க பேசினார். அண்மையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து அமைச்சர் சாகலவிடம் வாசுதேவ கேள்வி எழுப்பினார். அதற்கான காரணம் என்னவென்று லங்கா நியூஸ் வெப் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

டைடஸ் சப்பரமாது என்ற தொழிற்சங்க அமைப்பாளர் வாசுதேவவின் நெருங்கிய நண்பர். உண்மையை சொன்னால் வாசுவின் அனைத்து அந்தரங்க செயற்பாடுகளுக்கும் துணைபோகிறவர் இந்த டைடஸ். இந்த டைடஸ் என்பவரால் வௌிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 118 பேர் அண்மையில் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி டைடஸ் மீது குடிவரவு சட்ட விதிகளின்படி (பிரிவு 45 சீ) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்திலேயே சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து வாசுதேவ பாராளுமன்றில் கேள்வி எழுப்பி வருகின்றார்.

டைடஸ் என்பவர் மீது இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படடன. அரசியல் முதிர்ச்சியுடைய வாசுதேவ அதனை அறியாமல் இல்லை. அதனால்தான் கூட்டு எதிர்கட்சி சார்பில் இனவாதத்தை தூண்டுவதை ஓரத்தில் வைத்துவிட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து சத்தம் இடுகிறார். அதனால் சட்டவிரோத குடியேற்றவாசிகள் விடயத்தில் வாசுதேவவிற்கும் தொடர்பு இருப்பதாக எழும் சந்தேகம் நியாயமானதே!.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top