மகளால் பதவி இழக்கப் போகும் பிரபல அமைச்சர்!

ஜனாதிபதியின் ரஸ்ய பயணத்தின் பின் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் தனது அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை உறுதியாக அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் இப்போதிருந்தே அமைச்சிலுள்ள ஆவணங்களை மூட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக www.lankanewsweb.net இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அன்று 'யாரும் யுத்தம் செய்யலாம்' என்று பேசிய இந்த பிரபல அமைச்சர் ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் பேசினாலும் தனது அமைச்சை மீளப்பெற முடியாது என்று நன்கு அறிந்து இவ்வாறு மூட்டைக் கட்டுவதாக தெரியவருகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான இவருக்கு இந்நிலை ஏற்பட இவரது பிரத்தியேகச் செயலாளரான மகள் என தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தக் காரர்களிடம் லஞ்சம் பெறுவதே இவரது பணி என்பதை பிரதமர் தொடக்கம் அறிந்து வைத்துள்ளனர். இதனால் பிரபல அமைச்சர் குறித்து பிரதமரும் குழம்பிப்போயுள்ளார்.

ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் பெறும் அமைச்சரின் மகள் அமைச்சின் அதிகார சபை தலைவருடன் முரண்பாட்டு ஏற்படுத்திக் கொண்டு திரைசேறியில் இருந்து வந்த ஒரு தொகை பணத்தை பலாத்காரமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top