கொலையாளியை வீட்டில் வைத்து துப்பாக்கியை கைது செய்த ரதுபஸ்வல சம்பவம்!

ரதுபஸ்வல தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த நாட்களில் மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்திருந்த சம்பவம் ரதுபஸ்வல பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினரை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியமையும் தாக்குதல் மேற்கொண்டமையுமே காரணமாக இருந்தது.

2013 கம்பஹா வெலிவேரியில் நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் மற்றும் 2009ம் ஆண்டு வடக்கிலும் இராணுவத்தினரை பயன்படுத்தி மேற்கொண்ட 'மனிதாபிமான செயல்' பற்றி கேட்க முடியாது இருந்தது.

பிரதேசத்தின் மாசடைந்த நீரே ரதுபஸ்வல மக்களின் பிரச்சினையாக இருந்தது. பிரதேசத்தில் அமைந்துள்ள 'வெனிங்ரோஸ்' என்ற பெயரிலான தொழிற்சாலையின் கழிவுகளே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது. வெனிங்ரோஸ் தொழிற்சாலையின் உரிமையாளர் இலங்கையின் முன்னணி கோடீஸ்வரரான தம்மிக பெரேரா. தம்மிக பெரேரா என்பவர் ராஜபக்ஷர்களின் நண்பர். இதன் காரணமாகவே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினரை பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இராணுவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மறைந்திருந்தது 'நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினர்' என்ற பதாதை பின்னால். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட செல்லும் இடமெல்லாம் கூறுவது 'இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டேன்' என்று. ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் புலிகள் எனவே கருதப்பட்டது.

எதிரிகளாகவே நோக்கினார்கள். அதனால் தமிழர்கள் மீதான தாக்குதல் காலத்தல் 'இராணுவத்தின்' மரியாதை வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் இனவாதம் தூண்டப்பட்டாலும் வெலிவேரிய நகரத்தில் வகுப்பிற்கு சென்று வந்த அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் பியகம விற்பனை நிலையத்தில் சேவையாற்றிய அப்பாவி இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர். கடைக்கு வந்த பொது மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் காயப்படுத்திய 'இராணுவத்தின்' செயல்பாடாகவே இருக்கலாம் என்பதும் எமக்கு தெரியாது.

ராஜபக்ஷர்களினால் இச்சம்பவம் தொடர்பில் விசாரனை மேற்கொள்ளாமை சாதாரணம விடயம். இதன் மனித உரிமை அறிக்கை கூட வெளிவந்திருப்பது ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை வீழ்த்தியதன் பின்னரே. மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருப்பது இரண்டு வருடங்களுக்கு பின்பே.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிகேடிய தேசப்பிரிய குணவர்தன தற்பொழுதும் சுதந்திரமாகவே உள்ளார். வெலிவேரிய சம்பவத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவினால் தேசப்பிரியவிற்கு முழு பாதுகாப்பும் பெற்றுக்கொடுத்து துர்க்கிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போதைய 'நல்லாட்சி' அரசாங்கத்தின் கீழ் தேசப்பிரிய தற்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கின்றார். தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள மூன்று இராணுவத்தினரிடமும் எவ்வித தகவல்களையும் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. காரணம் அச்சம்பவத்தின் போது தலைமை வகித்த பிரிகேடியரிடமே தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ரதுபஸ்வல சம்பவம் தொடர்பில் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சி காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடிவடிக்கை எடுப்பதற்கு முயற்சி எடுத்தமையை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் இழுபறியாகவே இருந்தது. இது அவர்களின் பழக்கமாகவே இருந்தது. இருப்பினும் குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே மும்முரமாக இருந்தனர். இது மாற வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top