லசந்த கொலையாளிகளுக்கு கீத் நொயார் அடைக்களம் வழங்குகின்றாரா?

'த நேஷன்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயார் கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டமை மனிதநேயமற்ற சித்திரவதை ஆகியவை தொடர்பிலான வழக்கு கடந்த 30 விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது சந்தேகநபர்களை இனங்காணுதல் தொடர்பில் கீத் நொயார் சமூகமளிக்காமை காரணமா குறிப்பிட்ட இனங்காணமல் அடையாள அணிவகுப்பை நிறுத்தி சந்தேகநபர்களுக்கு பிணை பெற்றுக் கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கீத் நொயார் இவ்வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தொடர்ந்து அறிவித்திருந்தும் அவர் சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்கிரமவினால் குறித்த அடையாள அணிவகுப்பு நிறுத்தியுள்ளார். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் உள்ள கீத் நொயாருக்கு இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பலமுறை தன்னை கடத்திச் சென்ற குழுவினரை இனங்காணும் அணிவகுப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவித்திருந்தும் அவர் சமூகமளிக்காமைக்கு எக்காரணமாக இருந்தாலும் அதன் மூலம் இலாபம் அடைவது ராஜபக்ஷர்களே. பிரச்சினை இருப்பதும் அங்கேதான்.

கீத் நொயார் வழக்கிற்கு குறிப்பிட்ட விசாரணையின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரம் 'சண்டே லீடர்' முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் சம்பந்தமாக வழக்கிற்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் முன்வந்த அரச புலனாய்வு பிரிவின் கொலைக்கு குழு ( முடைடநச பசழரி) தொடர்பில் தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளன. கீத் நொயார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனம் லசந்த விக்கிரமதுங்க தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சட்டம் இவ்வாறு செயல்படுகின்ற போது தனது வழக்கிற்கு கீத் நொயார் சமூகமளிக்காமை லசந்த கொலையாளிகளுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும்.

கடத்திச் சென்று தாக்குதலுக்குள்ளான வழக்கு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என்றால் அதிகபட்சம் அடுத்த வழக்கின் போது கீத் நொயார் வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலையாகி விடுவார்கள். அப்பொழுது அவர்கள் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமைக்கு நஷ்டயீடு கோரி நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் கீத் நொயார் உண்மையிலேயே கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியமையே. கீத் நொயார் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கிடைக்கப்பெற்றபுகைப்படம் உலகிற்கு கிடைத்திருந்தும் இங்கு இடம்பெறுவது தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் கீத் நொயார் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்.

லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் தொடர்பில் ¾ சந்தேகநபர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். தேவைப்படுவது அவர்கள் மூலம் இவ்வாறான உத்தரவு வழங்கிய முக்கியஸ்தர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் ஹெந்தாவிதாரணவிற்கு அழுத்தம் கொடுத்த ராஜபக்ஷவை கண்டு பிடிப்பதற்கு. கீத் நொயார் தற்பொழுது எக்காரணத்திற்காகவோ இந்நடவடிக்கையை தடுக்கின்றார். இதற்கு உண்மையிலேயே 'ரிவிர' முன்னாள் ஆசிரியர் உபாளி தென்னகோன் மதிக்கப்பட வேண்டும். அவர் தன் மனைவியை தாக்கியவர்களுக்காக அமெரிக்காவிலிருந்து வருகை தந்து சாட்சியமளித்தார். ஆனால் கீத் நொயார் தன்னை தாக்கியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முன்வர மறுக்கின்றார்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இந்நாட்டில் ஒழுங்கற்ற சட்ட நடவடிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மறைக்கும் செயல்பாடுகளே இருந்தது. தற்பொழுது இவை நீக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளது. இருப்பினும் தற்பொழுது தன் மீது தாக்குதல் மேற்கொண்ட 'இராணுவத்தினர்' இனங்காண்பதற்கு கூட தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர், அத்துடன் அந்த விசாரனை லசந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்தும் முன்வராத ஊடகவியலாளர் எந்த பெயரில் இனங்காண முடியும். தயவு செய்து அவருக்கு 'கீத் நொயார் ராஜபக்ஷ' என்று கூறவேண்டாம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top