கீத் நொயார் சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு !

ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த (7)ம் திகதி பிணையில் விடுதலை செய்தவற்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றம் இலக்கம் 1ல் உயர்நீதிமன்ற நீதவான் கிஹாண் குலதுங்க முன்னிலையில் மணு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 30ம் திகதி இணங்காண்பதற்கான அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கீத் நொயார் சந்தேகநபர்களை இணங்காண்பது தொடர்பில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கீத் நொயார் தொடர்பிலான சந்தேகநபர்களை இணங்கான்பதற்கு முன்வரவில்லை என்ற காரணத்தினால் அடையாள அணிவகுப்பு தகர்க்கப்பட்டதுடன் கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்கிரம சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும் சந்தேகநபர்களுக்கு ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக அச்சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பில் உத்தரவிடுவதற்கு மேலதிக நீதவானுக்கு முடியாது என சட்டதுறையில் பேசப்படுகின்றது.

நீதவானால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதவான் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதை நீக்கியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top