மாதுருஓயாவில் 54250 ஏக்கர் காணி சீனாவிற்கு விற்பனை?

ஜனாதிபதி செயலகம் மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சில் இருந்து கிடைக்கும் தகவல்படி மாதுருஓயாவிவை அண்டிய பகுதியில் 54250 ஏக்கர் காணியை சீனாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தேசிய தொழில் அபிவிருத்தி நோக்காக கொண்டு காணியை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 43250 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்ததுடன் யுத்தம் முடிந்தபின் 2009ம் ஆண்டு தொடக்கம் மீள்குடியேறியுள்ளனர். தற்போது அவர்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் 2015ற்கு பிறகு அபிவிருத்தி நோக்கமாக வன இலாக்கா பிரிவினரால் மீள்குடியேறிய மக்கள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதும் மக்கள் அங்கிருந்து அகற்றப்படுவதாகவும் செய்திகளை ஊடகங்களுக்கு செல்லவிடாமல் அரசியல்வாதிகள் தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் ஊடாக மாதுருஓயா அபிவிருத்தி திட்டம் வெளி கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சு இதில் நேரடி தலையீடு செய்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின்மூலம் இந்த அபிவிருத்தி திட்டம் குறித்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சில் பிரதேச மக்கள் 172 விடயங்கள் பற்றி தகவல் கோரியுள்ளதுடன் அதில் 15 விடயங்கள் குறித்து பதில் கிடைத்துள்ளது. அதனால் பிரதேச மக்கள் மேன்முறையீடு செய்துள்ளதுடன் அது இம்மாதம் 27ம் திகதி விசாரணைக்கு வருகிறது.

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் வாழ்வாதார காணிகளை களவெடுக்க வேண்டாம் என பிரதேச மக்கள் கோருகின்றனர்.

இந்த காணி விடயம் குறித்து டயமெயநெறளறநடி.நெவ இணையமான நாம் தகவல் வெளியிட்டு வந்திருக்கிறோம். மாதுருஓயா தேசிய வனப்பூங்கா பிரதேசத்தில் தொப்பிகல வனப்பகுதியை அண்டி 4200 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவதாக நாம் தகவல் வெளியிட்டிருந்தோம். அபிவிருத்தி திட்டத்திற்காக இக்காணி சீனாவிற்கு வழங்கப்படவுள்ளதாக நாம் கூறியிருந்தோம். மகாவனவெலஅரியவங்க என்ற தேரரும் ரஞ்சித் ராஜபக்ஸ என்ற நபரும் இணைந்து இதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளதுடன் தற்போது பலரும் இதில் கைகோர்த்துள்ளதாக தெரியவருகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top