பொலிஸ்மா அதிபரின் தியானம் இதற்காகவா !

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அவரின் உத்தரவிற்கமைய குறிப்பிடப்பட்ட நேரத்தில் தியானம் செய்தாத குற்றத்திற்காக எம்.சமரகோன் பண்டா என்ற ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் லங்கா நிவுஸ் வெப் இணையம் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. ராகமையை வசிப்பிடமாகக் கொண்ட சமரகோன் பண்டா அன்று பொலிஸ் தலைமையகத்தில் மின்சார வேலையை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறு பொலிஸ்மா அதிபரின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அடுத்த மது ஒலிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக வேண்டும் என்பதே பொலிஸ்மா அதிபரின் தியானமாக இருந்துள்ளது.


பலவந்தமாக தியான செய்ய வைப்பது பக்தியா
குறிப்பிட்ட திகதியில் காலை 8.30 மணி தொடக்கம் 8.45 மணிவரை தனது உத்தரவிற்கமைய தியான வேலைத்திட்டம் நடைபெறுகின்றதா என பார்வையிடச் சென்ற பொலிஸ்மா அதிபர் மின்சார இயக்குநர் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் மது ஒலிப்பு பிரிவின் தலைமையகத்திற்கே சென்றுள்ளார். அதன் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவது பொலிஸ் பரிசோதகர் லூடொவைன் என்பவரே. அவர் பேகர் இனத்தைச் சேர்ந்த கத்தோலிக்கராவார். திடீரென அற்கு சென்ற பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர லூடொவையிடம் 'ஏன் நீ தியானம் செய்வதில்லை' என வினவிய அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். திடீரென இப்படி கேட்கும் பொழுது லூடொவை மேலே கீழே பார்த்தவாறு பொலிஸ்மா அதிபரிடம் 'சார் நான் ஒரு கத்தோலிக்கர் தானே.. ஏன் என்னை தியானம் செய்ய சொல்கிறீர்கள்' என வினவியுள்ளார். இரு மடங்கு கோபம் கொண்ட பொலிஸ்மா அதிபர் அப்பொழுது 'நீ எந்த மதமாக இருந்தாலும் எனக்கு பரவாயில்லை நாயே, நான் கூறுவது போல் தியானம் செய்' என தொடர்ந்தும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.


அப்பொழுது அவ்விடத்திலிருந்த அனைவரும் பொலிஸ்மா அதிபரின் இச்செயல்பாட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் பொலிஸ்மா அதிபரின் இச்செயல்பாடு மற்றும் தனக்கு கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் முன் மிகவும் கீழ்த்தரமான பேச்சு இவற்றைப் கவனித்த லூடொவைனை இறுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டது. அது தன்மீது பலவந்தமாக பிற மதத்தை திணக்க நினைக்கும் பொலிஸ்மா அதிபரின் செயல்பாடு மிகவும் கீழ்த்தரமானது.

லுடொவைன் என்பவர் சட்டரீதியான செயல்படும் பொலிஸ் அதிகாரி
மேற்குறிப்பிடப்பட்ட லூடொவைன் தொடர்பில் கூறியாக வேண்டும். சட்டத்தை மதிக்கும் பொலிஸ் அதிகாரி என அவரின் செயல்பாடுகள் மூலம் நிரூபனமாக நபர் என்பதனாலேயே. தனது தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


லூடொவைன் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயல்பட்ட காலங்களில் மிகவும் திறமையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தனது தந்தைக:கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரியாவார். அவரின் தந்தை ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top