வடக்கில் தமிழீழவிடுதலைப்புலிகள் வளர்த்த காடுகளை பலவந்தமாக அழிக்கம் இராணுவத்தினர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன் வளர்க்கப்பட்ட தேக்கு மரங்களை தற்பொழுது வடகிழக்கிலுள்ள இராணுவத்தினரால் பாரியளவிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர்கள் அங்கு வாழும் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

விசேடமாக 90 தசாப்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தெருக்கண்டிகுலம் பிரதேசத்தில் நூறு ஏக்கர் காணிகளில் வளர்க்கப்பட்ட தேக்கு காடுகள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மாங்குலம், ஒட்டுசுட்டான் வீதிகளில், கேப்பாப்புலவு பிரதேசத்தில் அமைந்துள்ள தேக்கு மர பாதுகாப்பாளர்களுக்கு நடப்பதும் இதே நிலைமை தான். பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் ஏனைய பகுதிகளில் உருக்கப்பட்ட காடுகளில் வளர்ந்திருப்பது பாரியளவிலான தேக்கு மரங்களே. இதில் அனைத்து பிரதேசங்களிலும் இன்று பாரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கஜூ மற்றும் மாங்காய் உற்பத்தியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுமென்றே மேற்கொண்ட உற்பத்தியாகும். அது 32வது வீதியினூடாக பயனிக்கும் போது காணக்கூடியதாக உள்ள 15 வருடங்கள் பழமைவாய்ந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக பிரதேசங்களில் இந்த தேக்கு காடுகளை வளர்த்தது அவ்வமைப்பின் வன வளர்ப்பு பிரிவினராலேயே. கஜூ மற்றும் மாங்காய் காடுகள் வளர்த்தல் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய விடயமாகும். காரணம் தெற்கில் எல்டீடீஈ வசமிருந்த பிரதேசங்களுக்கு வரும் உணவு முற்றாக நிறுத்தப்பட்டதனால் இதனை உருவாக்கியுள்ளனர். மேலும் இது ஒரு முக்கிய வேலைத்திட்டமாகவே கருதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்காடுகளில் மரம் வெட்டுதல் எல்டீடீஈயினால் முழுமையாக தடைசெய்யப்பட்டிருந்ததுடன் 24 மணியத்தியாலமும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் பாதுகாப்பு ஊழியர்களும் செயல்பட்டனர். இப்பிரதேச வாழ் எவரேனும் ஒரு நபர் மரம் வெட்ட முற்பட்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டது. விசேடமாக தேக்கு மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக காலையிலிருந்து மாலை வரை தேக்கு காடுகளில் கொட்டிக்கிடக்கும் காய்ந்த இழைகளை சேகரித்து அதனை ஒரு இடத்தில் சேகரிக்க வேண்டும் என தண்டிக்கப்பட்டனர்.

நாம் இது தொடர்பில் வினவிய போது யாழ் மாவட்ட வாழ் மக்கள் 'சிங்கள அரசாங்கமும் இராணுவமும் காடுகளை அழிக்கையில் எல்டீடீஈ காடுகளை வளர்த்தனர்' என தெரிவித்தனர்.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top