அக்கரையான் குள மதிலையும் சேதப்படுத்திய நாமல் ராஜபக்ஷ  !

அக்கரையான் குளம், கிளிநொச்சியில் அக்கரையான் குளம் நகரத்தில் அமைந்துள்ள மாபெரும் நீர்த்தேக்கம். இந்த குளம் 'கடந்த ஆட்சி காலத்தில்' நாமல் ராஜபக்ஷர்களின் பிரபல விடுமுறை விடுதியாக செயல்பட்டமைக்கான ஆதாரங்கள் பல. எகல குளம் அருகில் கடந்த காலங்களில் நாமலின் கூடாரம் ஒன்றும் இருக்கின்றதை காணக்கூடியதாக இருந்ததுடன் நாமலுடன் அங்கு அதிகளவில் வருகை தந்திருப்பது பிரதேச அரசியல்வாதியான ஸ்ரீரங்கா.

அறுபதி தசாப்தங்களில் அமைக்கப்பட்ட அக்கரையான் குளம் அழகு சூழ்ந்த இடம் மற்றும் ஒலி நிறைந்த சூழல் என்ற அடிப்படையில் பிரபலமாக திகழ்ந்த இடமாகும். இந்த இடம் தொடர்பில் தெரிந்து கொண்டதன் பின் நாமல் ராஜபக்ஷ அங்கு குளக் கரை ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இன்று நீங்கள் அக்கரையான் குளக்கரையில் பயணித்தால், இந்த குளக்கரை மற்றும் குளம் அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகளக்கு எவ்வளவு பணம் விரயமாகியுள்ளது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த கரையின் காரணமாக இரு வாகனங்கள் செல்ல முடியாது. அந்தளவு சிறியது. மேலும் சுற்றிவரை நீர் வடிந்தோடி செல்லக்கூடியவாறும் அமைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் பணத்தை வீண்விரயமாக்கி அபிவிருத்தி வேலைத்திட்டம் என தெரிவித்து மில்லியன் டொலர் பணம் கமிஷனாக பெற்றுக் கொண்டு ராஜபக்ஷர்கள் நடத்திய நாடகம் தொடர்ந்து வெளிவருகின்றது. அதற்கு அக்கரையான் குளம் நல்லதொரு உதாரணம்.

எகல ஸ்ரீ ரங்கா மற்றும் ராஜபக்ஷ குடும்பத்திற்கிடையே இருந்த தொடர்பு அது உலகிற்கு இரகசியம் இல்லை. டக்லஸ் தேவாநந்தா, பஷில் ராஜபக்ஷ, நாமல் மற்றும் ஸ்ரீரங்கா ஆகியோருக்கிடையே இருந்த தொடர்பு தொடர்பில் விக்கிலீகஸ் ஊடாக பாரியளவிலான கருத்துகள் வெளிவந்துள்ளது. 2010 பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீரங்கா எம்டீவி சக்தி டீவி தொலைக்காட்சியில் பல பதவிகளை வகித்துள்ளார். பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ ஊடாக வடகிழக்கில் செயல்பட்ட ஈபிடீபி மற்றும் கருணாவின் குழுவினரான பெராமில்ட்ரி குழுவினரிடமிருந்து கப்பம் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் ஸ்ரீரங்கா ராஜபக்ஷ குடும்பத்துடன் நெருங்கிய உறவைப் பேனி வந்தார். ராஜபக்ஷ குடும்பம் ஸ்ரீரங்கா தொடர்பில் குறிப்பிடப்பட்ட தகவல் 'பெரும்பாலானவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.   
    

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top