இலங்கையில் இரும்பு விற்பனையாளர்கள் பல கோடி வரி மோசடி !

இந்நாட்டு இரும்பு உற்பத்தி துறையில் வரி மோசடி காரணமாக ஒரு வருடத்திற்கு ரூபா 5000 மில்லியன் (5 பில்லியன்) வருமானம் அரசாங்கத்திற்கு இழக்கப்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நம்பகத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடும் வகையில் இந்நாட்டில் இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனம் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றை சரியான முறையில் செலுத்தாமையின் ஊடாக இந்த வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதுடன் இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டி தரப்பினருக்கு அறிவித்திருந்து குறிப்பிட்ட நிறுவனத்தினால் கிடைக்கப்பெறும் பல்வேறு சலுகைகள் காரணமாக இதுவரை இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை.

குறைந்த பட்சம் இந்நாட்டு கொன்க்ரீட் கம்பி ஒரு மாதத்திற்கு 45000 மெட்ரிக் தொன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகின்றது. அதில் விற்பனை செய்யப்படும் இரும்பு கம்பி ஒரு டொன்னுக்காக தேசத்தை கட்டியெழுப்பும் வரியாக 20 வீதம் மற்றும் வற் வரி 15 வீதமும் செலுத்த வேண்டியுள்ளதுடன் குறிப்பிட்ட நிறுவனம் அதற்கு நிகரான கடிதங்களை உள்ளடக்குவதில்லை. அனைத்து விற்பனையாளர்களும் தமது வரி 30 வீத வரி பத்திரங்களை மட்டுமே முன்வைக்கின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top