பஷிலின் 'மல்வானை மாளிகை' அமைப்பதற்கு அனுமதி பெறவில்லை !

தற்பொழுது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ரோஹன ராஜபக்ஷவிற்கு சொந்தமான, கௌனி ஆற்றின் அருகே சுமார் 16 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டள்ள 'மல்வானை மாளிகை' தொடர்பில், அதற்கு பொறுப்பான தொம்பே பிரதேச சபையில் அமைப்பதற்கான எவ்வித அனுமதியினையும் பெற்றுக் கொள்ளவில்லை என அப்பிரதேசசபை நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல் குறிப்பிடுகின்றது.

இதனால் ஒரு கட்டிடத்தொகுதி மற்றும் நிலம் உண்மையிலேயே தொம்பே பிரதேச சபைக்கே சொந்தமானது என மேலும் குறிப்பிடுகின்றது. உரிமையாளர் அற்ற இந்த நிலம் பகிரங்கமாக ஏலத்தில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்து அது பின்னர் இச்சட்ட நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஷிலிற்கு சொந்தமான மல்வானை மாளிகை அமைப்பதற்கான செயல்பாடுகளை பொறுப்பேற்று செயல்பட்டிருப்பது, தான் 'நவீன ஜெப்ரி பாவா' என தன்னால் அறிமுகப்படுத்திய கட்டிடக்கலை நிபுணர் மூதித ஜயகொடி என்பவரே. நவீன ஜெப்ரி பாவாவுக்கு, கடந்த ஆட்சியின் ஊடாக முழுமையான அனுமதியுடன் கட்டிடத்தொகுதிகளை அமைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த மல்வானை மாளிகை தனது என தெரிவித்து அது தொடர்பில் உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு வரிப்பணம் கூட செலத்தியுள்ள மூதித ஜயகொடி பின்னர் அவ்வாறு தெரிவித்தது தவறுதலாகவே என தெரிவித்து, அவரினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தை மீண்டும் தனக்கு பெற்றுக் கொடுக்குமாறும் கோரியுள்ளார்.

தெளிவாக தெரிகிறது சட்டத்தை வேடிக்கைக்கு உற்படுத்தவது
உண்மையிலேயே நிதி மோசடி பிரிவின் ஆலோசனைக்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூதித ஜயகொடி என நவீன ஜெப்ரி பாவா பஷில் மற்று திருநடேசன் ஆகியோருக்கு எதிராக அரசாங்க சாட்சியாளராக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது.

பஷில் மற்றும் திருநடேசன் ஆகியோரின் வழக்கை சுலபமாக வெற்றி கொள்வது தொடர்பில் அரச அணுசரனை பெற்றுக்கொள்ள வேணடும் என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இறுதியில் நடைபெறுவது பஷில் மக்கள் வீரர் (Zero to Hero) ஆவார். பஷிலின் கறுப்பு பணம் வெள்ளையாக்வதே (Whiter than White) இந்நடவடிக்கையின் மூலம் வழிவகுக்கும் என்பதே சட்ட அறிஞர்களின் எண்ணமாகும்.

இந்த வழக்கின் பிரதிவாதி தொடர்பில் அதிகபட்ச குற்றத்தை ஒப்படைக்க எதிர்வரும் மே மாதம் (03) ம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top