பாதுகாப்பு செயலாளர் பதவி விலகுவது ஏன்?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை இராஜினாமா செய்த பின், அவருக்கு இராஜதந்திர பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மற்றுமொருவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,கடந்த மாதங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து ஓய்வுப்பெறவுள்ளார் என போலியானச் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஜனாதிபதி ரஷ்யா சென்று யுத்த கப்பல் ஒன்றை கொள்வனவு செய்ய முன்மொழிந்த போது அதற்கு கருணாசேன ஹெட்டியாராச்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இவர் பதவி இராஜினாமா செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் இல்லாத சமயத்தில் யுத்த கப்பல் எதற்கு என்றும் அதையும் மீறி யுத்த கப்பல் வாங்குவதாயின் ரஷ்யாவை விட நான்கு மடங்கு விலை குறைவான இந்திய கப்பலை கொள்வனவு செய்யலாம் என பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, வென்னப்புவ பகுதியில் உள்ள கிங்ஸிலி பெனாண்டோ என்பவர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஜனாதிபதிக்கு நெருங்கியவர் ஆவார். இந்த சம்பவங்களின் பின்னணியில் ஜனாதிபதி 'பொஸ்' என அழைக்கப்படும் ஊடக நிறுவன உரிமையாளர் கோடீஸ்வரர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top