அமெரிக்காவின் மண்டல கண்கானிப்பு கொள்ளுப்பிட்டியில்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலவலகத்திற்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலப்பரப்பு மேலும் அமெரிக்க தூதரகத்தை கொள்வனவு செய்ததுடன் பல நாடுகளின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு எதிராக கடுமையான அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.


அதற்கு காரணம் அமெரிக்கா, பிரித்தானியா, கெனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் தமது புலனாய்வு பிரிவை நடத்திச் செல்வது தொடர்பில் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்த பூமியை பயன்படுத்தியமை. குறிப்பிட்ட பூமியில் அமெரிக்கா தமது ரேடார் உட்பட பல உபகரணங்களை உபயோகிக்க திட்டமிட்டிருந்தும் அப்படி மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதன் ஊடாக ஆசிய வலயத்தில் கடுமையான அழுத்தம் ஏற்படுமா என ஆசியல வலயத்தில் உள்ள நாடுகள் பலவற்றில் புலனாய்வு சேவை கருத்திற் கௌளப்பட்டு வருகின்றது.

முன் பிரித்தானிய உயர் ஸ்தானிகரராலயத்திற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டி ஆறு ஏக்கர் பூமி இரு நாட்டு கொடுக்கல் வாங்கல்களாக அமெரிக்க தூதரகத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.


கொழும்பு துறைமுகம், காலி முகத்திடல் மற்றும் கொழும்பு கோட்டை உட்பட இலங்கை வர்த்;தக வலயத்தில் அமெரிக்க கண்காணிப்பு மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடுமையாக கவனத்திற் கொண்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமெரிக்கா வலய கண்காணிப்பு நிலையம் தொடர்பில் ரேடர்உபகரணங்ளை பயன்படுத்தினால் சீனா மற்றும் இந்தியா அது தொடர்பிலான உபகரணங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

எவ்வாறாயினும் அமெரிக்கா கொள்ளுப்பிட்டியிலிருந்து கொள்வனவு செய்த பூமியை கடுமையாக பாதுகாத்து வருவதுடன் அங்கிருந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான அனைத்து கட்டிடத்தொகுதியை அகற்றி புதிய கட்டிடத்தொகுதியை அமைப்பது தொடர்பில் தீர்மானித்துள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான பூமியை அமெரிக்கா சுலபமமாக கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு எவ்வாறு கிடைத்திருக்கும் என நாம் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வினவிய போது தனக்கு தெரிந்தளவில் அதற்கு எவ்வித இடையூறும் இருக்கவில்லை என தெரிவித்தார். உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான நிலம் நாட்டிற்கே சொந்தமானது எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top