விஜேதாஸ அரசாங்கத்திலிருந்து வெளியேறுவாறா?

நீதிமன்றம் மற்றும் புத்தஸாசன அமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசிய கடசியில் உயர் பதவியொன்றை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த ஆலோசனையுடன் அரசியல் கருத்துக் கணிப்பின் படி தெரிகின்றது. சரத் பொன்சேகாவிற்கு உதவி தலைவர் பதவி பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் ஆலோசனை முன்வைத்துள்னதனால் அதற்கு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உட்பட ஐதேக முக்கஜயஸ்தர்கள் எதிரப்பு தெரிவித்துள்ளனர்.

செயற்குழு ஒன்றுகூடி அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் தயாரா என்றாலும் எழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக பிரதமர் ஒரு அடி பின்நோக்கி செல்வதற்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அக்குழு எதிர்வரும் 8ம் திகதி கூடுவதற்கு ஆலோசனை முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரதமரின் இத்தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கும் விஜேதாஸ ராஜபக்ஷ சரத்பொன்சேகாவிற்கு ஐதேக உதவி தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்தால் தான் கட்சியிலிருந்து விலகுவதாக தமது நெருங்கியவர்களுடன் தெரிவித்துள்ளார். கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் செயற்பட்டாளர்கள் இருக்கும் போது குறைந்தபட்சம் அதிகளவு மக்கள் செல்வாக்கு அற்ற சரத் பொன்சேகாவிற்கு எவ்வாறு ஐ.தே.க தலைவர் பதவி பெற்றுக்கொடுப்பது என விஜேதாஸ ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் விஜேதாஸ ராஜபக்ஷவின் புதல்வியின் திருமண நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை கங்காராம விகாரையில் நடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அது மட்டுமின்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இத் திருமண வைபவத்தின் பின்னர் விஜேதாஸ ராஜபக்ஷ தனது எதிர்கால அரசியல் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் எடுக்கபடவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top