அமைச்சரவை உப குழுவில் ரவிக்கும் குமாரசுவாமிக்குமிடையே விவாதமா !

மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை உப குழுவில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் போது நிதி அமைச்சர் மத்திய வங்கி ஆளுநரை குறை கூறியுள்ளார்.


மத்திய வங்கியின் ஆளுநரும் மலிக் சமர விக்கிரமவிற்கு இடையே நெருங்கிய நற்பு காரணமாக பிரதமர் பிரதமர் குமாரசுவாமியிடம் பல மாதங்களா சொல்லவிருந்த விடயத்தை நிதி அமைச்சர் மூலம் தெரிவித்துள்ளார் என அதன்போது அங்கிருந்த அமைச்சர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.


மத்திய வங்கியின் ஆளுநர் ஒழுங்காக செயல்படுவதில்லை எனவும், மத்திய வங்கி தொடர்பில் அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளதாகவும் அதன் பிரதிபலனாக வேகமாக வீழ்ச்சியடைவதாகவும் மத்திய வங்கி தற்பொழுதும் நிர்வாகம் இடம்பெறுவதும் தனக்கு ஏற்றாற் போல் என பல அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிவாட் கப்ரால் கடந்த ஆட்சியில் நெருங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகார் இருந்தும் வெட்கம் இல்லாமல் குமாரசுவாமியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கடந்த தேர்தலின் போது குமாரசுவாமி மஹிந்த ராஜபக்ஷவிற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் ஜனவரி வெற்றியின் பின் பிரதான நியமனமான ரவி கருணாநாயக்கவின் நிதி அமைச்சை நீக்குமாறு கோரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மற்றும் மலிக் சமரவிக்கிரம, முன்னாள் ஜனாதிபதியின் ஊடாக தற்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் நிதி அமைச்சரை நீக்குவதற்காக செயல்பட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top