ரஞ்சீவ சென்றது சுற்றிவளைப்பிற்கா அல்லது டீல் ஒன்றிற்கா ?

கடந்த 9ம் திகதி பிலியந்தலையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரனை மேற்கொள்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அது மேற்குறிப்பிடப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரனைக்காக மேலதிகமாக 11 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் குறிப்பிட்ட நியமனம் தொடர்பில் லதீப்பிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த IP ரங்கஜீவ பிலியந்தலைக்கு சென்றது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சுற்றிவளைப்பிற்காக அல்லது கொடுக்கல்வாங்கல்களுக்காகவா சென்றார் என்பது தொடர்பில் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. ரங்கஜீவ இந்த சுற்றிவளைப்பிற்காக தனது வாகனத்தில் சென்றுள்ளார். பொலிஸ் சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தவது சாதார விடயமாக இருப்பினும் இதன் போது சுற்றிவளைப்பிற்காக பயன்படுத்தியிருப்பது ரங்கஜீவவிற்கு சொந்தமான வாகனத்தையே.

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரான ரங்கஜீவவிற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் அதிகளவு அதிகாரம் உள்ளதுடன் அந்த பிரிவில் பல விடயங்கள் இடம்பெறுவதும் அவருக்கு தேவையான விதத்திலேயே என தகவல்கள் குறிப்பிடுகின்றன. போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா மற்றும் பொறுப்பதிகாரி லூடொவைக் அபிபபாவிற்கு உள்ள அதிகாரம் ரங்கஜீவவிற்கு இருப்பதாக பொலிஸ் திணைக்களத்தினுள் பகிரங்கமாக இரகசியமாகும்.


ரங்கஜிவ எட்டாம் திகதி நள்ளிரவு தனது நெருங்கிய பொலிஸ் நண்பர்களுடன் தனியார் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றது போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் கொடுக்கல் வாங்கலுக்கு என சந்தேகம் எழுந்துள்ளது. ரங்கஜீவவின் கடந்த காலத்தை விசாரனை செய்து போது இவ்வாறான சந்தேகம் எழுந்துந்தள்ளது சாதார விடயமாகும்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ரங்கஜீவவிற்கு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top