ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை ஶ்ரீலசுக இழுத்தடிப்பது ஏன்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தூதுக்குழுவுடன் சீனா நோக்கிச் செல்வது முதலீட்டு ஊக்குவிப்புக்காகும். ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 70 வருடங்கள் குத்தகைக்கு வழங்க ஜனாதிபதி விரும்பவில்லை. ஜனாதிபதி இதனை தனது நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கினால் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிக்குகள் கூறுவதுடன் ஐதேக அமைச்சர்களுக்கு இது பணம் வசூலிக்கும் வழி என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் 30 வருட குத்தகைக்கு வழங்குவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் பேச முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரித்தானியா அன்றி ஜிஎஸ்பி ப்ளஸ் பெறுவது பலனளிக்காது என்று கூறப்பட்டுள்ளது. மலிக் சமரவிக்ரம இதனை நியாயப்படுத்துகிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரித்தானியாவிற்கே இலங்கையின் 60% ஏற்றுமதி செல்கிறது.

இதனை நியாயப்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் உள்ளிட்ட ஐதேக கூறுகிறது. ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அதனை மறுக்கிறது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பான இறுதி அறிக்கை சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் வர்த்தக வலயம் ஆகியவற்றுக்கு பெருந்தொகையான காணிகளை சீனாவுக்கு வழங்குவது குறித்து தொடர்ந்தும் சர்ச்சையான நிலைமை நீடித்து வருகின்றது.

இதன் காரணமாக அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது பிற்போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top