NDB வங்கி தலைவரின் டென்டர் மோசடி!

NDB வங்கியின் உபதலைவர் மற்றும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஆகியோர் இணைந்து செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் குறித்த தகவலை வௌியிட்ட பிரதான நிதி அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கதை ஒரு முக்கிய திருப்புமுனைக்கு வந்துள்ளது. கடன் வழங்கியது தொடர்பில் மோசமான அறிக்கை இருக்கும் நிலையில் வௌிநாட்டு வங்கியால் பதவி இறக்கம் செய்யப்பட்ட மற்றும் பிரதமரின் உறவு சகோதரரான தற்போதைய தலைவர் ஆனந்த அத்துகொரலவே, வருடாந்த அறிக்கையை தயாரிக்கும் நிறுவனத்தை தெரிவு செய்தமையாகும். இது பாரிய தொகை என்பதால் வங்கியில் பல பங்காளர்கள் விலைமனு கோரியிருந்தனர்.

வரலாற்றில் நிறைவேற்று தலைவர் ஒருவர் இவ்வாறான விடயங்களில் தலையிடவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைவர் வந்தது தொடக்கம் வங்கி வீழ்ச்சியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் வௌியிடும் கருத்துபடி பேன் ஏசியா வங்கி NDB வங்கியை கையகப்படுத்தும் காலம் தொலைவில் இல்லை. சிறிய வங்கி என கருதப்படும் NTB வங்கியை விட NDB வங்கி பின்னிலையில் உள்ளது.

வங்கியின் பணிப்பாளர் சபையில் லலித் வீரதுங்கவின் மனைவி, கப்ராலின் நெருங்கிய நண்பர்கள் நிறைந்துள்ளனர். வங்கித்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படவில்லை. அண்மையில் வங்கியின் ஒரு பணிப்பாளராக அமைச்சர் சாகலவின் சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top