DIG லலித் ஜயசிங்கவை வித்தியா கொலை வழக்கில் இருந்து காத்த DIG சில்வா!

எதிர்வரும் 28ம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முன்னோட்டமாக (Trial-at-Bar) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், சாட்சியை மறைத்தல், தப்பிச் செல்ல உதவுதல் போன்றவை தொடர்பில் குற்றப்பத்திரிகை பெறவுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி தமிழ்மாறன் ஆகியோர் வழக்கில் இருந்து தப்பிக்க உள்ள சூழ்ச்சி தொடர்பில் இரகசிய பொலிஸ் பிரிவில் அனைவராலும் கச்ச கச்ச சில்வா என அழைக்கப்படும் சிசில் சில்வா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் பகிரங்க தகவல் அளித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் திருமண வைபவத்தில் மேற்கண்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் சிசில் சில்வா கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு வந்திருந்த பொலிஸ் அதிகாரிகளைப் பார்த்து, 'நீங்கள் எங்கள் லலித் பொஸ்ஸை இல்லாதொழிக்க நினைத்தீர்கள் தானே? நான் இருக்கும் வரை அது நடக்காது' என்று சிசில் சில்வா கூறியுள்ளார். 'பொஸ் திறமைசாளி எப்படி அப்படியொரு வேலை செய்தாரோ..?' என்றும் கூறியுள்ளார்.

அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் வீரனாக தன்னை காட்டிக் கொண்ட சிசில் சில்வா, 'தப்புவா (சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தப்புல சில்வா) எனது சிறந்த நண்பர் என லலித் பொஸ் அறிவார். என்னை காப்பாற்ற உன்னால் மாத்திரமே முடியும் என லலித் பொஸ் என்னிடம் கூறினார். பொஸ் பயப்பட வேண்டாம் எனக் கூறி நான் தப்புவாவை சந்தித்தேன். தப்புவிடம் நான் போட்ட பந்தினை அடுத்து பொஸ் மட்டுமல்ல சட்டத்தரணியும் தப்பித்தார். என்னிடம் மோதி ஜெயிக்க முடியாது நமது பெரியவர்கள் செய்வதை விட இது பெரிய தவறல்லவே..?' என்று சிசில் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாட்சியை மூடி மறைக்க முற்பட்டமை தொடர்பில் லலித் ஜயசிங்க மற்றும் தமிழ்மாறன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற இரகசிய பொலிஸாருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top