நாமல் - யோஷித பங்குச் சந்தையில் 20 பிரதான பங்குதாரர்களிடையே எவ்வாறு வந்தார் ?

கொழும்பு பங்கு சந்தை தர வரிசையிலான நிறுவனங்களின் பிரதான 20 பங்குதாரர்கள் இடையே முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான அங்கம் வகிக்கும் நிறுவனமான எஸ்கொட் லங்கா பீஎல்சி (Ascot Lanka Plc) நிறுவனத்தை கொள்வனவு செய்தமைக்காகவே.


நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் இதனை கொள்வனவு செய்வதற்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது குறித்து நிதி மோசடி பிரிவினர் விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின் படி இந்நிறுவனத்தின் பிரதான 10 பங்குதாரர்களிடையே இந்த ராஜபக்ஷ சகொதரர்கள் உள்ளனர்.   பங்குச்சந்தையில் இது தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் மற்றும் தகவல் நிதி மோசடி பிரிவினரால் விசாரனை மேற்கொள்ளப்படும். அத்துடன் இந்நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு நிதி பெற்றுக் கொண்ட விதம் குறித்து எதிர்வரும் காலங்களில் நாமல் மற்றும் யோஷிதவிடம் விசாரனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களின் நிதி மோசடி குறித்து தொடர்ந்து குற்றம் எழுந்துள்ளது.

ascot 1

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top