போர்ட் சிட்டி திட்டத்தில் குணவன்ச தேரருக்கு 50 லட்சம்!

சிங்கள பௌத்த மக்களுக்காக என குரல் எழுப்பி தன்னை பௌத்த தலைவராக காட்டிக் கொள்ளும் எல்லே குணவன்ச தேரருக்கு போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 50 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக மத்திய வங்கி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான கணக்கு வழக்குகளை மத்திய வங்கி ஆராய்ந்த போதே இந்த 50 லட்சம் ரூபா கொடுப்பனவு குறித்த தகவல் வௌிவந்துள்ளது. இதுபோன்று ஒரு பில்லியன் ரூபா பல நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் அழுத்தம் பிரயோகிப்பதால் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களுடன் நெருங்கி செயற்பட்ட வர்த்தகர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருகிறனர்.

போர்ட் சிட்டி 10 ஏக்கர் மஹிந்தவினது?

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் கொழும்பு போர்ட் சிட்டியில் 10 ஏக்கரை தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்க சைனிஸ் ஹார்பர் என்ஜினியரிங் நிறுவனம் இணங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ தனது நெருங்கிய வியாபார நண்பர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அது தொடர்பான ஒப்பந்தம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அது வௌிக் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ள இந்த சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்களின் இறுதி பயனாளிகளாக (Ultimate Beneficiary) மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் என்பது புலப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top