பிரதமரே தயவுசெய்து சுரேஸ் ரத்வத்தவை வீட்டுக்கு அனுப்பவும்!

இலங்கை விமான சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேஸ் ரத்வத்தைவை அப்பதவியில் இருந்து விரட்டியடிக்குமாறு கடந்த 12 மாதங்களுக்கு மேலாக நாம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். அவர் தனது அதிகாரத்தை தொடர்ந்து துஸ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள நான்கு எழுத்து கெட்;ட வார்த்தையை இவர் அடிக்கடி பயன்படுத்துவதால் விமான சேவை ஊழியர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுரேஸ் ரத்வத்தை இவ்வாறு அடாவடி செய்வதற்கு காரணம் அவரது சகோதரரான சரித்த ரத்வத்தை பிரதமருக்கு நெருங்கி இருப்பதால் ஆகும். 2001-2004 வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காமல் போனமைக்கு பிரதான காரணம் சரித்த ரத்வத்தை என்பதை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். அதன்பின் ஐதேக ஆட்சிக்கு வரும்வரை இவர் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. தற்போது இரண்டு ரத்வத்தைகள் இணைந்து ஐதேகவை மீண்டும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருவதாக ஐதேக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

விமான சேவையில் பணிபுரிய எவ்வித தகுதியும் அனுபவமும் இல்லாத சுரேஸ் ரத்வத்தை தொடர்ந்தும் தனது அடாவடிகளை புரிந்து வருகிறார். பணிப்பாளர் சபையும் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இவரது புதிய முயற்சி விமான ஓடுதள பொறுப்பாளர்களை தனக்கு கீழ் கொண்டுவந்து அவர்களை தனக்கு ஏற்றாற் போல் இயக்குவதாகும். குறித்த பிரிவின் பிரதானியை ஓரம் கட்டிவிட்டு மனிதவள பிரிவில் உள்ள பிரதீபா கெக்குலாவலவிற்கு அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இது ஒரு பாரிய பாதுகாப்பு பிரச்சினை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்வத்தையின் செயற்பாடுகளால் தேசிய விமான சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் உள்ள இலங்கை விமான சேவைக்கு சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கும் முயற்சியை சுரேஸ் ரத்வத்தை முன்னெடுத்து வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வாக்களித்த மக்களுக்கு கௌரவம் செலுத்த பிரதமர் நினைத்தால் அவர் செய்ய வேண்டிய முதல் கடமை ரத்வத்தை சகோதரர்களை மீண்டும் டுபாய் நோக்கி அனுப்பி திரும்பி வர வேண்டாம் என்று கட்டளை இடுவதாகும். ரத்வத்தை பிரதமரை தொங்கிக் கொண்டு இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அபகீர்த்தியே மிஞ்சும் என்பது தின்னம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top