ராஜபக்ஷவை ஏமாற்றிய தம்மிக பெரேரா நல்லாட்சியையும் ஏமாற்றுவார் !

பிரபல கசினோ வியாபாரி தம்மிக பெரேரா கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது புதல்வர்களுடன் மிகவும் நெருக்கமாக கொடுக்கல் வாங்கல் செய்த நபராவார். எவ்வாறாயினும் நாமல் மற்றும் யோஷித ஆகியோரின் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தொகை தம்மிக பெரேராவிடமும் உள்ளது என உறுதிசெய்யப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் தம்மிக பெரேரா அப்போது நாமல் மற்றும் யோஷித ஊடாக தனக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

அதற்கான உதாரணமாக ஆர்.ஏ.த.மெல்மாவத்தை (டுப்ளிகேஷன் வீதி) 430ம் இலக்கத்தில் அமைந்தள்ள Bellagio Colombo  கசினோ. சட்டத்தின் அடிப்படையில் பாடசாலை, ஆலயங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் 500 மீற்றர் தூரத்திற்கு அப்பால் இவ்வாறான கசினோ ஒன்றை கட்ட வேண்டும். இருப்பினும் Bellagio Colombo  இலங்கையின் முன்னணி பாடசாலையான கொள்ளுப்பிட்டிய மஹானாம வித்தியாலயம் முன்பாகவே அமைந்துள்ளது.

bellagio 1

bellagio 2

bellagio 3

bellagio 4

bellagio 5

bellagio 6

bellagio 7

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top