பழைய கடன்களை அடைக்க பங்குதாரர்களிடம் பணம் கோரும் HNB

தங்களது 15 பில்லியன் மூலதனத்தை நிரப்புவதற்கு பங்குதார்களிடம் உதவிகோரி ஹட்டன் நெஷனல் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் மாகம்புர துறைமுகத்திற்கு குறித்த வங்கி வழங்கிய 3.5 பில்லியன் கடனை அடைப்பதற்கே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நெஷனல் வங்கியின் 30 வருடகால வாடிக்கையாளர் ஹெரி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குவதற்கான முறையான படிமுறை கையாளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியானது தற்போது பணிப்பாளர் சபையால் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிவாட் கப்ராலால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் இப்போதும் மீளப் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாக பங்குதாரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சுஜீவ முதலிகே, ரொஹான் கருணாரத்ன, ரோஸ் குரே மற்றும் கப்ராலின் முதல் மைத்துனன் அமல் கப்ரால் ஆகியோர் பணிப்பாளர் சபையில் உள்ளனர்.

வங்கியின் முக்கிய சொத்த ஒன்றையும் பணிப்பாளர் சபை விற்பனை செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அந்த சொத்து ஹட்டன் நெஷனல் வங்கியின் பிறந்த இடம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் 35% ஹரி ஜெயவர்த்தன 23% பங்குகளையும் கொண்டுள்ளனர். ஆனால் கடந்த அரசாங்க காலத்தல் ஹரி 10% மட்டுப்படுத்தப்பட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top