ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு அறிவிப்பு !

நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்த, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு இன்று (04) முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருமாறு அச்செயலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதி மற்றும் கருணாசேன ஹெட்டியாரச்சி பாடசாலை நாட்கள் முதல் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் தற்போது அவர்கள் இருவருக்கும் பாரியளவில் பிரச்சினை எழுந்துள்ளது. கருணாசேன ஹெட்டியாராச்சியின் அதிகாரங்களில் தலையிட்டு செயல்படும் ஒரு பெண்ணின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்பெண் கமனி ஹெட்டியாரச்சி ஆவார். கருணாசேன ஹெட்டியாரச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவராக இருந்த காலத்தில் அச்சபையில் கணக்காய்வாளராக செயற்பட்டதுடன், கருணாசேன ஹெட்டியாரச்சி பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றதுடன் பாதுகாப்பு அமைச்சின் பிரதான கணக்காய்வராக கமனி ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அமைச்சின் அனைத்து கேள்விப்பத்திரங்கள் குறித்து அனைத்து செயல்பாடுகளும் அவர் வசம் இருந்தது.

அதன்போது பாரியளவிலான கேள்விப்பத்திரமாக கருதப்பட்ட இராணுவத்தினரின் உணவு வழங்கல் கேள்விப்பத்திரம் பல காலங்கள் தொட்டு டேவிட் விக்கிரம என்ற நிறுவனம் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கமனி ஹெட்டியாரச்சி வருகையின் பின் அது பகிர்ந்தளிக்கப்பட்டு தனது நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அன்று முதல் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் டேவிட் விக்கிரம நிறுவனத்திற்கு முற்றிலும் அனுசரணை வழங்கும் நபரான அக்கேள்விப்பத்திர சபையில் சேவையாற்றிய மேலுமொரு கணக்காய்வாளரான வனிகசூரிய. அவர் தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் சுகாதார அமைச்சின் பிரதான கணக்காய்வாளராக செயற்பட்டிருந்ததுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின் ஜனாதிபதி செயலகத்தில் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top