சாகலவின் அமைச்சு குறித்து ஜனாதிபதி காட்டம்!

இரண்டு வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சி விசாரணைகள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை என கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் குற்றவாளிகள் சுதந்திரமாக இருப்பதாகவும் இதனால் மக்கள் கேலி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வௌியிட்ட சில அமைச்சர்கள் விசாரணைகள் முடியும்வரை பொலிஸ் பிரிவை ஜனாதிபதி ஏற்க வேண்டும் எனவும் அல்லது நடுநிலையான தனக்கு நம்பிக்கை தரும் ஒருவரிடம் பொலிஸ் துறையை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சில முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலையிட்டு தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது. அதில் சிலர் அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் அழுத்தத்தை கண்டுகொள்ளாது விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் 16 விசாரணைகளில் முக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். இவருடன் சகாலவும் செயற்படுகிறார். இவ்விருவரும் கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலரிடம் பல சலுகைகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'அனைத்தும் சரி ஆனால் தேசிய பொறுப்பை நிறைவேற்ற அவர் இடையூறாக இருக்கக் கூடாது" என அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் சாகல மற்றும் பொலிஸ்மா அதிபரின் செயற்பாட்டினால் நல்லாட்சி அரசாங்கம் கடும் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top