ஹட்டன் நெஷனல் வங்கி பழைய பாவத்தை மறைக்க பங்குதாரர்களிடம் கடன் கோருகின்றது !

ஹட்டன் நெஷனல் வங்கி தனது மூலதனத்தை உறுதிபடுத்துவதற்காக பங்குதாரர்களிடம் ரூபா 15 பில்லியன் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம் மூலதனத்தை திருப்பிச் செலுத்தாது கடந்த ஆட்சி காலத்தில் கப்ராலின் வேண்டுகோளுக்கமைய மாகம்புர துறைமுக வேலைத்திட்டத்திற்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட கடனை மறைப்பதற்காகவே இதனை பெற்றுக்ககொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமான காலங்களாக வங்கியில் கொடுக்கல் வாங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய பங்குதாரரான ஹெரீ ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.


நிவாட் கப்ராலினால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் தற்பொழுதும் அப்பணிப்பாளர் சபையில் இருப்பதுடன் ஒரு பங்குதாரர் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை உரிமையாளர் பிரச்சினை எழுந்துள்ளது. சுஜீவ முதலிகே, ரொஷான் கருணாரத்ன, ரோஸ் குரே மற்றும் கப்ராலின் மைத்துனரான அமல் கப்ரால் ஆகியோர் இதில் அடங்குவார்கள். ஹெரீ ஜயவர்தன இது குறித்து தற்பொழுதும் நீதிமன்றம் சென்றுள்ளதுடன் தனது பங்கு உரிமையை கோரியுள்ளார்.


மேலும் அவரின் புகாரிற்கமைய ஹட்டன் நெஷனல் வங்கியின் பணிப்பாளர் சபையினால் வங்கிக்கு சொந்தமான சொத்தின் மூலம் பாரியளவு இலாபம் கிடைப்பதனால் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் நெஷனல் வங்கியின் உரிமையின் 35 வீதம் அரசாங்கத்திற்கே கிடைத்துள்ளது. இருப்பினும் பலவீனமாக முகாமைத்துவம் காரணமாக அரசாங்கம் இது குறித்து முற்றிலும் அமைதியாக உள்ளது. ஹெரீ ஜயவர்தன தற்பொழுத 23 வீதம் மட்டுமே பங்குதாரராக இருக்கின்றார். இருப்பினும் கடந்த அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கமைய அவரது பங்கு 10 வீதம் வரை வரையரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top