டெங்கு ஒழிப்பு - உங்கள் அபிமான தொலைக்காட்சியில் இன் காலை 9-11 ஒலிபரப்பு !

இன்று காலை 9-11வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து டெங்கு கட்டுப்படுத்தல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.


எதிர்வரும் சனிக்கிழமை (15) காலை 10-12 வரை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பிலான செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவதற்காக இன்று 2 மணித்தியாலங்கள் இடம்பெறும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.


'நாம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஒன்றிணைவோம் !' என்ற தொணிப்பொருளின் கீழ் டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


இச்சமூக சேவையில் இலங்கையின் அனைத்து உடகங்களும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஒன்றிணைவோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top