டெங்கு ஒழிப்பு தேசிய திட்டத்தில் நாமும் இணைவோம்!

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது எமது கையில் உள்ளது. அது தேசிய பாதுகாப்பு திட்டமும் ஆகும். எனவே நாளை (15) காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய செயற்திட்டத்திற்கு நீங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறித்த காலத்தில் சுற்றாடலை சுத்தப்படுத்துவதுடன் தமது வீட்டுச் சூழலையும் சுத்தப்படுத்தி டெங்கு நுளம்பு வராமல் தடுக்க வேண்டும். ஊடகத்துறை அமைச்சு, முப்படை, பொலிஸ், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு ஆகியன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் இத்திட்டத்தை நேரடி ஔி,ஒலிபரப்பு செய்ய தயாராகி வருகின்றன. அதனால் நீங்கள் உங்கள் சுற்றாடலை சுத்தம் செய்வதை இந்த ஊடகங்கள் நேரடி ஔிபரப்புச் செய்ய வரலாம். அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு நோயை இல்லாமொழிப்போம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top