மஹிந்தவின் திருட்டு காணி பத்திரங்கள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையின் காணிகளை விற்பனை செய்துள்ளமை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி ஷேங்ஸ்ரீலா ஹொட்டல் நிறுவனத்திற்கு கொழும்பு கோட்டையில் உள்ள 2.43 ஹெக்டேயர் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த காணி குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது என கடந்த அரசாங்கம் கூறி வந்தது.

ஆனால், இலங்கைப் பிரஜை ஒருவருக்கு இருக்கும் சகல உரிமைகளுடன் இந்த காணி வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது காணி உறுதியின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கையெழுத்திட்டு 8 ஆயிரத்து 250 மில்லியன் ரூபாவுக்கு காணியை விற்பனை செய்துள்ளனர்.

விற்பனை செய்யப்பட்ட கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள குறித்த காணியிலேயே இராணுவ தலைமையகம் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top