பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மீது பொலிஸ் நாய் பாய்ச்சல் !

தற்பொழுது யாழ்.நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய நீதிபதிகளின் முன்னிலையில் இடம்பெறும் விசாரனையானது துஷ்பிரயோகத்திற்குற்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் வழக்கின் புகாரிற்கமைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரட்ணத்திற்கு நேற்று (25) விசேட சம்பவத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

கடந்த வாரம் நல்லூர் கோவில் அருகில் யாழ்.நீதிமன்ற நீதவான் எம்.இளஞ்செழியன் முகங்கொடுத்த சம்பவத்தில் அவரது பாதுகாவலர் உயிரிழந்தமையினால் வித்தியாவின் வழக்கின் நீதவான்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதவான்கள் மற்றும் சாட்சியாளர்கள் உட்பட கவனத்திற் கொள்ளப்பட்ட ஏனைய நபரான அரச தரப்பின் புகாரிற்கமைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஆவார். இந்த வழக்கில், ஆரம்பத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் தப்புல த லிவேராவிற்கே ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரத்னம் புகாரின் சாட்சிகளுக்கான பொறுப்பதிகாரியாக செயல்பட்டுள்ளார். அவர் மிகவும் துரிதமாக செயல்படும் நபராவார். இவ்வழக்கின் சில நாட்களில் நள்ளிரவு எட்டு மணிவரை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இப்படி இருக்கையில் எழுந்துள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோவை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்துள்ளார். அதன் போது பிரதி பொலிஸ்மா அதிபர் 'நீ யார்?' என வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் தான் வித்தியா வழக்கு விசாரனையின் சட்டத்தரணி என தெரிவித்ததும் 'சரி அதற்கு என்ன பிரச்சினை' என தெரிவித்துள்ளார். பின்னர் எழுந்துள்ள நிலைமையை குறித்து எடுத்துரைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனராலிடம் 'யார் சொல்வது அது இளஞ்செழியனை இலக்கு வைத்து செய்தது என்று ? மற்றது அப்படி ஒவ்வொருவரும் கேட்கும்படி பாதுகாப்பு கொடுக்க முடியாது. தனது பாதுகாப்பை தானே பார்த்துக் கொள்ள வேண்டும்' என கூறிய பாலித பெர்ணான்டோ தொலைபேசியை துண்டித்துள்ளார்.


அதன் போது மிகவும் மனமுடைந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரத்ணம் இறுதியாக யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு பதிளலித்தத போது 'ஆம் சார்' என்னால் என்ன நடக்க வேண்டும் என வினவியுள்ளார். நிலைமையை தெளிவுபடுத்த பின்னர் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படாது ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய ரொஷான் பெர்ணான்டோ பொலிஸ் விசேட படையில் கொமான்டருடன் கலந்துரையாடி ளுவுகு விசேட பாதுகாப்பை, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் தலைமையில் அரச நீதவான் குழுவினருக்கு (25) காலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாலித பெர்ணான்டோ என்பர் இரத்தினபுரி பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் கண்கானிப்பாளர் என எமது தேடலின் போது தெரியவந்துள்ளது. தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் கீழ் சேவையாற்றியவர் ஆவார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இரத்தினபுரி 'சொகா மல்லி' என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மூவர் மீதான தாக்குதலில் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ்மாத அதிபர் லலித் ஜயசிங்கவின் ஆலோசனையின் பின் விடுவிக்கப்பட்டிருப்பது இந்த பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ. அத்துடன் எம்பிலிப்பிட்டி சுமித் பிரசன்ன தாக்குதல் சம்பவத்தின் போது சட்டத்தை செயல்படுத்தாததும் இவரினாலேயே. இவை அனைத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் போது தெரியவந்துள்ளது.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top