வித்தியா ​கொலை சந்தேகநபர் விடுதலை - லலித் ஜயசிங்க பின்னணியில் விஜயகலா!

2015 மே மாதம் 13ம் திகதி சிவலோகநாதன் வித்தியா கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திய சம்பவமாகும். இத்தாக்குதல் சம்பவமானது நாட்டின் அனைவரின் மனதிலும் அச்சத்தை ஏற்படுதியுள்ளது. ஆனால் தற்பொழுதும் தகவல்கள் குறிப்பிடும் வகையில் அதன் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்க பல அமைப்புகள் முன்வந்துள்ளமை சிறுவிடயம் அல்ல.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக மகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ் குமார் என்பவரை யாழ்ப்பாணம், கைட்ஸ், புங்குடுதீவு பிரதேச வாழ் மக்களினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது அவரை பொலிஸார் வசம் ஒப்படைத்து, அவரை தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியது முன்னாள் யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க. லலித் ஜயசிங்க மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் தமிழ்மாறன் பற்றி இதற்கு முன் வெளிவந்த செய்திகளில் வெளியிட்டிருந்தோம். இரண்டு வருடங்களின் பின்னராவது லலித் ஜயசிங்க இது குறித்து கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டதுடன் அவரின் சேவையும் இடைநிறுத்தப்பட்து.

சந்தேகநபரை விடுவிப்பதற்கு சிறுவர் நடவடிக்கைகள் அமைச்சரின் வேண்டுகோள்

தகவல்கள் குறிப்பிடும் வகையில் பேராசிரியர் தமிழ் மாறன் இச்சம்பவத்துடன் தொடர்புபடுவதற்கான காரணம் சிறுவர் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வர்னாலேயே. அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேராசிரியரை தொடர்பு கொண்டு 'இவ் இளைஞன் நல்லவன். சுவிட்சர்லாந்தில் இருக்கின்றான். இவருக்கு இச்சந்தர்ப்பத்தில் உதவி செய்யுங்கள். இவரும் உங்களுக்கு உதவி செய்வார்' என தெரிவித்து போது மகாலிங்கம் சிவகுமாரை விடுவிக்குமாறு லலித் ஜயசிங்கவிற்கு அழுத்தம் கொடுக்குமாறு பேராசிரியர் தமிழ்மாறனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். லலித் ஜயசிங்க என்பவர் பேராசிரியர் தமிழ்மாறனின் கையாள். விஜயகலாவின் வேண்டுகோளின் பின்னணியில் இரகசியம் உள்ளது. தமிழ்மாறன் என்பவர் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பார்த்திருப்பவர். சிவகுமார் என்பவர் 'கேம் காரன்' தேர்தலின் போது தமிழ் மாறனுக்கு அவனின் 'உதவி' தேவைப்படும்.

விஜயகலா மற்றும் துவாரகேசஸ்வரன்

விஜயகலா மகேஸ்வரன் என்பவர் முன்னாள் யாழ்.மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் பாரியார் ஆவார். டீ.மகேஸ்வரனின் மறைவின் பின்னர் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதுடன் ஒருபுரம் மஹிந்த ராஜபக்ஷவுடன் 'டீல்' உடனும் மறுபுரம் எல்.டீ.டீ.ஈ கீழ் கப்பம் செலுத்தி வடமாகாணத்தில் வியாபாரம் ஒன்றை உருவாக்கியவர். தி.மகேஸ்வரனின் மரணத்திற்கு காரணம் எல்.டீ.டீ.ஈயிடம் கப்பம் பிரச்சினையே என தெரியவந்துள்ளது. இக் கப்பம் குறித்த வியாபாரத்திற்கு முன்னணியாக திகழ்வது விஜயகலா மற்றும் அவரது மச்சானாகிய துவாரகேஸ்வரன் ஆகியோரே. ராஜபக்ஷர்கள் ஆட்சியில் இருந்தவரை அவர்களுடன் டீல் செய்த இவர்கள் இருவரும் இன்று ஐ.தே.கவின் நிழலில் உள்ளனர்.


சுவிஸ்குமாரை கொழும்பிற்கு கொண்டு வந்தது யார்?

உறுதி செய்யப்படாத தகவல்கள் குறிப்பிடும் வகையில் லலித் ஜயசிங்கவினால் பேராசிரியர் தமிழ் மாறனின் கோரிக்கைககு அமைய விடுவிக்கப்பட்ட பின்னர் துவாரகேஸ்வரனாலேயே சுவிஸ்குமார் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். இது அரசியல் செல்வாக்கு என்பது நன்கு தெரிகின்றது. தாயும் மகனுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் குற்றவாளியான சுவிஸ்குமாருக்கு இவர்கள் இருவரின் ஒத்துழைப்பு கிடைதுள்ளது. துவாரகேஸ்வரனின் உதவி அத்துடன் நின்றுவிடாது வித்தியா வழக்கின் பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக முன்வந்த சட்டத்தரணி கே.வி.தவராசா. இவர் வித்தியா குடும்பத்தினரை மிரட்டியவராவார். பணத்திற்காக எந்த வேலையைம் செய்ய தயாரானவர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top