வசிம் தாஜுதீன் கொலை விசாரணைக்குச் செல்ல நடுநடுங்கும் ஹிராந்தி!

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீன் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ 27ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் ஆனால், க்ஷிரந்தி சமூகமளிக்கமுடியாது என அவரது சட்டத்தரணிகள் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால், 'சிறிலிய சவிய' அறக்கட்டளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷ பயன்படுத்தியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காகவே இவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலை 10 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும், சட்டத்தரணி ஊடாக தன்னால் வர முடியாது என அறிவித்துள்ளார்.

கொலை தினத்தன்று இரவு 46 தொலைபேசி அழைப்பு

டடிபென்டர் வாகனம் பாவனையின் ஊடாக மாத்திரமல்ல பல வழிகளிலும் தாஜுதீன் கொலையுடன் க்ஷிரந்தி தொடர்புபட்டுள்ளார். கொலை நடந்த தினம் இரவு அலரி மாளிகையில் இருந்து க்ஷிராந்தி ராஜபக்ஷ, நாமல் புஸ்பே ஐயா என்று அழைக்கும் கல்கிஸ்ஸ பொலிஸ் பொறுப்பதிகாரி புஸ்பகுமார, நாராஹென்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி டேமியன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி கெப்டன் திஸ்ஸ ஆகியோருக்கு 46 தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். பல தடவை அழைப்பெடுத்து என்ன பேசினார் என்பது புதுமையாகவுள்ளது.

அநுர சேனாநாயக்க கூறிய 'உண்மையான கொலையாளி' எங்கே?

தாஜுதீன் கொலை வழக்கில் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க நீதிமன்றில் குற்றவாளிகள் கூண்டில் நின்று, 'நான் இந்த கொலைக்கு சம்பந்தம் இல்லை 'உண்மையான கொலையாளி வௌியில்' என்று கூறியிருந்தார்.

1.கொலை நடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இது விபத்து என அநுர சேனாநாயக்க கூறி வந்தார். ஆனால் நீதிமன்றில் அது கொலை என ஒப்புக் கொண்டார்.

2.உண்மையான கொலையாளி வௌியில் என்று அநுர சேனாநாயக்க கூறியுள்ளதால் யார் அந்த கொலையாளி என்பது மர்மம்.

அநுர சேனாநாயக்க என்பவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு கீழ் நிலையில் உள்ள பதவியை வகித்தவர். மஹிந்த ஆட்சியில் இவர் முக்கிய அதிகாரி. நீதிமன்றம் சென்று நீதிபதிகளுக்கு உபதேசம் செய்தவர். இவரது கருத்து பொய்யானது என்பது தௌிவாகிறது.

70% வேலை முடிந்தது

இந்த வழக்கு மிகவும் கடினமானது. நேரடி சாட்சிகள் எதுவும் இன்றி வௌி சாட்சிகளை வைத்து வாதாடப்பட்ட வழக்காகும். குற்ற வழக்கில் அனைத்து குற்றங்களும் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். ஒரு சாட்சி தவறினாலும் முழு வழக்கும் தள்ளுபடி செய்யப்படும். இந்நிலையில் இந்ம வழக்கு 70% நிறைவுக்கு வந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் உள்ள நெஞ்சி குறுகுறுக்கும் என்பர் அதன்படி தாஜுதீன் வழக்கில் க்ஷிராந்தி விசாரணைக்கு செல்லாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 28ம் திகதி யோசித்த CID விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top