விசாரணை என்றதும் யோசித்தவிற்கு மீண்டும் காலில் உபாதை!

இன்று காலை 10 மணிக்கு கொழும்பு இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்க வருவதாகக் கூறியிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ திடீரென தனக்கு காலில் மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக வர முடியாது என சட்டத்தரணி மூலம் அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்டுள்ள உபாதை குணமடையும்வரை தான் கட்டாய படுக்கை ஓய்வு (Strict bed rest) எடுக்கத் தீர்மானித்துள்ளதால் வேறு தினம் ஒன்றை வழங்குமாறு யோசித்த கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது பிணை நிபந்தனையை தளத்துக் கொள்ளும் நோக்கில் மேல் நீதிமன்றுக்கு மனு கொடுத்து காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவென அவுஸ்திரேலியா செல்ல அனுமதி கோரியிருந்தார். அவ்வாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்து இரண்டு நாட்களில் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி மரதன் ஓடியதை புகைப்படம் மூலம் முழு உலகமும் பார்த்தது. யோசித்தவிற்கு அவுஸ்திரேலியா செல்ல நேரிட்டது தனது காதலியை பார்க்கவே தவிர சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு அல்ல.

யோசித்தவின் கால் உபாதையை நன்கு அறிந்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு அழைக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு பணித்துள்ளார். க்ஷிராந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது ஆவணங்கள் தயார்படுத்த காலக்கெடு தேவை என திகதி பிற்போடப்பட்டுள்ளது.

எனினும் இவ்விருவரையும் அடுத்த வாரம் விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. அல்லாவிடின் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்து மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யோசித்தவும் க்ஷிராந்தியும் பல ஜோதிடர்களை அணுகிய நிலையில், இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் ஆபத்தானதாக அமைவதால் அந்த மாதத்தில் வைத்தியசாலையில் சேருமாறும் அல்லது ஓகஸ்ட் முடிந்து திகதி ஒன்றை பெறுமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுவிடயம் குறித்து மஹிந்தவும் நாமலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க முயற்சி செய்து வருகின்ற போதும் அவர்கள் இருவரும் சட்டம் மற்றும் பொலிஸ் விடயங்களில் தலையிடாமல் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் சாகலவும் தற்போது நடுநிலை தன்மையை கடைபிடித்து வருகிறார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top